புதிரான உலகம்...Puthir.Com

அந்தரங்க புகைப்படத்தை பகிர்வதற்கு முன் இதை படியுங்கள்

0 25

சமூக வலைத்தளங்களில் தங்களின் புகைப்படத்தினை பகிரும் பெண்கள் ஏராளம். ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி யாரும் பெரிதாக யோசிப்பது இல்லை.

நமது அந்தரங்க புகைப்படத்தினை நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொண்டாலும் அதனை மூன்றாவதாக ஒரு நபர் பார்ப்பதால் அதிக ஆபத்து உண்டாகும்.

சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப், மெயில் போன்றவற்றில் புகைப்படத்தினை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று கூறுவதற்கான காரணங்கள் சில.

எஸ்.எம்.எஸ், மெயில், வாட்ஸ் அப் போன்றவற்றில் நீங்கள் அனுப்பிவிட்டு அழித்த நிர்வாண புகைப்படமானது அழியாது உலகில் ஏதோவொரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டிருக்கும்.

அந்தரங்க புகைப்படம்
அந்தரங்க புகைப்படம்

இன்று காதலிக்கும் ஒரு நபர் தான் நாளை கணவராக போகிறவர் என்று கூற இயலாது. நிர்வாணப் புகைப்படத்தினை காதலனுடன் பகிர்ந்து கொள்வதும் ஆபத்து தான்.

அனுப்பும் புகைப்படத்தினை காதலர் மட்டும் தான் பார்க்கிறார் என்று நம்ப முடியாது. அவரது நண்பர்கள் கூட பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு உண்மையான காதலாக இருந்தாலும் ஏதேனும் ஒரு படத்தினை பார்ப்பதற்காக நண்பர்களிடம் மொபைலை தரும்போது அதில் பதிந்திருக்கும் புகைப்படங்களை அவர்கள் பார்த்து விடலாம்.

உங்கள் பெற்றோர் இதனை என்றாவது ஒருநாள் பார்க்கும் போது அவர்களின் மனது கட்டாயம் புண்படும்.

இணையத்தில் வெளிவந்த நிர்வாண புகைப்படங்களால் பிரபலங்கள் படும் கஷ்டத்தை தினம் தினம் பார்க்கிறோம். என்றாவது ஒரு நாள் இந்நிலை உங்களுக்கும் ஏற்படலாம்.

அந்தரங்க புகைப்படம்
அந்தரங்க புகைப்படம்

அந்தரங்க புகைப்படத்தினை தெரிந்தோ அல்லது தெரியாமலோ பகிர்வதால் ஏற்படும் விளைவுகளை செக்ஸ் டேப் என்னும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெரியாமல் சேமித்து வைத்திருந்த அந்தரங்கம் இணையத்தில் பரவியதால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனை நீக்குவதற்கு அவர்கள் படும் கஷ்டத்தையும் விளக்கும் படம் இதுவாகும்.