புதிரான உலகம்...Puthir.Com

இந்த வீடியோவை பார்த்தீர்கள் என்றால் இந்தியாவுடன் காதலில் விழுந்து விடுவீர்கள் !

0 9

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், அண்மையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இந்த விளம்பரம் பற்றி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஒரு கட்டுரை எழுதியது. ”பிரிட்டிஷ் ஏர்வேஸ்ஃபியூவல்ட் பை லவ்” என்ற அந்த விளம்பரத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.அதாவது லண்டனில் இருந்து ஒரு முதிய பெண்மணி ஹைதராபாத் நோக்கி பயணிக்கிறார். அவருக்கு விமானத்தில் ஹெலினா என்ற பணிப் பெண், காலில் ஷாக்ஸ் மாட்டி விடுகிறார். அப்போது பணிப்பெண்ணின் கேசம் கலைந்து போய் இருக்கிறது. அந்த பெண் பயணி, விமானப்பணிப் பெண்ணுக்கு பாசத்துடன் ஹேர்பின் மாட்டி விடுகிறார்.

தொடர்ந்து விமானம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த முதிய பெண் பயணியால் மட்டும் உறங்க முடியவில்லை.என்னவென்று பணிப்பெண் விசாரிக்கிறார். தொடர்ந்து இருவருக்குள்ளும் ஒரு பந்தம் உருவாகிறது. மேற்கொண்டு அறிய இந்த வீடியோவை பார்த்தீர்கள் என்றால் இந்தியாவுடன் காதலில் விழுந்து விடுவீர்கள்!

உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட விளம்பரம் இது.