புதிரான உலகம்...Puthir.Com

ஐபோன் கேமராவிலேயே படம்பிடிக்கப்பட்ட இந்திய திருமணம்!! கலக்கல் வீடியோ

0 12

கெனான், நிக்கான் டி.எஸ்.எல்.ஆர் போன்ற கேமராக்களைக் கொண்டு திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கும் போட்டோகிராபர்களே இரு வீட்டாரிடமும் சிக்கி சின்னாபின்னமாகும் நிலையில், முழுக்க முழுக்க ஐபோனில் உள்ள கேமராவைக் கொண்டே ஒரு போட்டோகிராபர் திருமண விழா முழுவதையும் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்றால் அது ஆச்சர்யம்தானே.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த செஃபி பெர்கர்சன் தான் அந்த புகைப்படக் கலைஞர் ராகஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த ஒரு பிரம்மாண்ட திருமண விழாவை இவர் தனது ஐபோன் 6 எஸ் ப்ளஸ் கேமரா மூலமாக படமெடுக்க, பார்ப்பவர்கள் எல்லாம் அதை வியந்து பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இது குறித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத பெர்கர்சனோ, உலகப் புகழ்பெற்ற கிடார் இசைக்கலைஞர் ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் வாசித்த கிடாரை உங்களிடம் கொடுத்தால் உங்களால் ஜிம்மியைப் போல் வாசிக்க முடியாதல்லவா. அதே போலதான், அழகும் செய்நேர்த்தியும் எடுக்கும் கேமராவில் இல்லை எடுக்கும் போட்டோ கிராபரிடம்தான் இருக்கிறது என்கிறார்.