புதிரான உலகம்...Puthir.Com

1950ம் ஆண்டு பூமியில் உலவிய ஏலியன் – உண்மையாக இருக்கலாம் என்கிறது நசா விடுத்துள்ள அறிக்கை !

0 20

1950 ம் ஆண்டு பூமியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 8 அடி உயரமுள்ள மனிதனைப் போன்ற வேற்றுக் கிரக வாசி ஒன்றை தாம் கண்டு புகைப்படம் எடுத்ததாக ஒரு நபர் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கி இருந்தார். குறித்த புகைப்படமும் வெளியாகியது. இன் நிலையில் தற்போது நாசா விஞ்ஞானிகள் ஒரு அரிய கண்டு பிடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள். அது என்னவென்றால் , “புரோக்ஸ்மா” என்று மனிதர்களால் அழைக்கப்படும் கிரகம் ஆகும். இது பூமியில் இருந்து வெறும் 4 ஒளியாண்டு தொலைவில் தான் உள்ளது என்பது தான் அதிர்ச்சி தரும் தகவல்.
பூமியில் இருந்து 100 அல்லது 200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் பூமிக்கு அருகாமையில் உள்ள இந்த கிரகத்தை எவ்வாறு தவறவிட்டார்கள் என்று தெரியவில்லை. குறித்த புரோக்ஸ்மா என்னும் கிரகம் ஒரு சூரியனைச் சுற்றி வருகிறது. அங்கே பூமியை ஒத்த கால நிலை காணப்படுவதாகவும். அங்கே நீர் இருந்தால் உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தற்போது நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை இந்தக் கிரகத்தில் இருந்து தான் சில மனிதர்கள் எமது பூமிக்கு வந்துசெல்வது வழக்கம் என்று அமெரிக்கர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள ஏரிய 51 என்ற இடத்தில், குறித்த மனிதர்கள் வந்து சென்ற தடையங்கள் இருப்பதாகவும். அமெரிக்கா இதனை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.