புதிரான உலகம்...Puthir.Com

ஏவ முன்னரே வெடித்து சிதறிய பேஸ்-புக் சாட்டலைட்: 200 மில்லியன் டாலர்கள் ஒரு நொடியில் பஸ்பமாகியது !

0 16

ஸ்பேஸ் X என்று அழைக்கப்படும் அமெரிக்க ராக்கெட், பேஸ் புக் நிறுவனம் தயாரித்த முதல் சாட்டலைட்டை விண்ணில் ஏவ இருந்தது. நேற்றைய தினம் வழமையான பரிசோதனைகளை நடைபெற்றது. காற்றின் வேகம். ராக்கெட்டின் எரிபொருள் என்று அனைத்தையும் அவர்கள் பரிசோதித்த வேளை. ராக்கெட்டை ஒரு முறை பரீட்சாத்தமாக இயகிப் பார்க்க அவர்கள் முனைந்துள்ளார்கள். இன் நிலையில் திடீரென அது வெடித்து சிதறியுள்ளது.
அதில் இருந்த பேஸ் புக்கின் சாட்டலைட்டும் அழிந்துபோய் உள்ளது. ஏ- 6 என்று அழைக்கப்படும் இந்த சாட்டலைட்டை விண்ணுக்கு ஏவி, சுமார் 14 நாடுகளுக்கு இன்ரர் நெட் இணைப்பை வழங்க பேஸ் புக் நிறுவனம் முடிவெடுத்து இருந்தது. இவை அனைத்தும் பாழாகியுள்ளதாக பேஸ் புக் நிறுவனர் கூறியுள்ளார். இது ஒரு சதிச்செயலா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.