புதிரான உலகம்...Puthir.Com

வாட்ஸ் ஆப்பில் மாணவிகளுக்கு ஆபாசம் படம்! கிளு கிளு போலீஸ்காரரின் சில்மிஷம்!

0 52

குமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரது புகைப்படத்தை அவரது தந்தை தனது வாட்ஸ்அப் புரோபைலில் வைத்திருந்தார்.

அந்த மாணவியின் புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஆபாச படங்களுடன் இணைத்து அசிங்கமாக சித்தரித்து அதே எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் போரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவியின் தந்தைக்கு அனுப்பிய புகைப்படம் எந்த செல்போன் எண்ணிலிருந்து வந்தது என கண்டறிந்து அதன் மூலம் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்நிலையில் மாணவியின் தந்தைக்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் குமரி மாவட்டத்தில் இருந்தும் அதன் பிறகு சென்னையில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சென்னை குமரன்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உளவுப்பிரவு போலீஸ்காரராக பணிபுரியும் செந்தில் (44) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததை ஒப்பு கொண்டார். மேலும் செந்தில் இதேபோல் பல மாணவிகளுக்கு ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பியதும் தெரியவந்துள்ளது.

செந்திலிடம் இருந்து, முறையான ஆவணங்கள் இல்லாமல் வாங்கிய 12 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இவர் அடிக்கடி சிம்கார்டுகளை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார்.

பிடிபட்ட போலீஸ்காரர் செந்திலின் சொந்த ஊர் குமரி மாவட்டம் படந்தாலுமூடு மடிச்சல் பகுதி ஆகும். அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்த சமூகத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு போலீஸ்காரரே இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டது போலீஸ் துறைக்கே அவமானமாக கருதப்படுகிறது. தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.