புதிரான உலகம்...Puthir.Com

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்த கல்லூரி மாணவர்! பள்ளி மாணவிகளை… அய்யய்யோ!

0 25

விழுப்புரம் மாவட்டம் அருகே கடையம் பகுதியை சேர்ந்தவர் படையப்பா(19). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

படையப்பாவும், அவரது நண்பர்களும் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே சென்றிருக்கிறார்கள்.

அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 3 மாணவிகள் விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த மாணவிகளில் 2 பேர் 3ம் வகுப்பும், ஒரு மாணவி 7ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இதனை பார்த்த படையப்பாவும், அவரது நணபர்களும் அந்த மாணவிகளிடம் சிரித்து பேசியிருக்கிறார். பின்னர் மாணவிகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.

பின்னர் அந்த 3 மாணவிகளையும் நைசாக பேசி, பள்ளிக்கு பின்புறம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார் படையப்பா.

இதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற மாணவிகள், பெற்றோர்களிடம் படையப்பாவும் அவனது நண்பர்களும் தங்களிடம் தவறாக நடந்ததை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், படையப்பா மற்றும் அவனது நண்பர்கள் மீது போலீசில் புகார் செய்தனர். இதையொட்டி குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து ஏமாற்றி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.