புதிரான உலகம்...Puthir.Com

‘‘ஹார்ட் அட்டாக்’’ முன்கூட்டியே கண்டறியும் கருவி! தமிழக மாணவன் சாதனை!

0 19

ஓசூரை சேர்ந்த மாணவர் ஆகாஷ் மனோஜ். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மாரடைப்பை முன்கூட்டியே கண்டறியும் கருவியை கண்டுப்பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவர் ஆகாஷ்மனோஜ் கூறுகையில், சின்ன வயசுல இருந்தே எனக்கு மருத்துவ அறிவியலில் ஆர்வம் அதிகம்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்கு அடிக்கடி போவேன்.

அப்படி நான் செல்லும் போதெல்லாம் மருத்துவ அறிவியலில் புதிதாக ஏதாவது கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்படும்.

அதன் விளைவாகவே தான் இந்த மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளேன்.

மேலும் ஆகாஷ்மனோஜ்க்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ‘ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருதை கடந்த 15ம் தேதி வழங்கி கவுரவித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய அளவில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறவர்கள் மட்டுமே குடியரசு தலைவரின் இன்னோவேசன் ஸ்காலர்ஸ் இன்ரெசிடென்ட்ஸ் புரோகிராம் திட்டத்தில் இடம்பெற முடியும்.

மாரடைப்பை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவியை ஆகாஷ் உருவாக்கியிருப்பது தமிழர்கள் அனைவரையும் பெருமைடைய செய்துள்ளது.

ஆகாஷ்மனோஜை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமரும் பாராட்டியுள்ளார்கள்.