புதிரான உலகம்...Puthir.Com

கன்னடர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கும் சீமான்

0 16

தமிழகத்தில் மாணவர்கள் பல லட்சம் பேர் திரண்டு போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று தந்துள்ளனர். இந்த போராட்டம் இந்தியாவுக்கே ஒரு முன் உதாரணமாக பார்க்கப்படுகிறது.

தமிழக மாணவர்களின் வழியை பின்பற்றி கர்நாடகத்தில் மாணவர்கள் கம்பளாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போ£ராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் கன்னடர்களின் போராட்டத்தில் அவர்களோடு கைகோர்க்கவும் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு,

தமிழ் இளையோர் எம்மண்ணில் நிகழ்த்திய தைப் புரட்சியை அடியொற்றி கன்னட இளைஞர்களும், பொதுமக்களும் கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருது ஓட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகப் போராடுவது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தருகின்றது.

அவர்களது போராட்டம் சிறக்கவும், போராட்ட நோக்கம் வெல்வதற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தோடு கம்பலா விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் எழுச்சிமிகுப் போராட்டங்களில் கர்நாடக நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் எனவும் உறுதியளிக்கிறேன். சனநாயகப் புரட்சி வெடிக்கட்டும்! அநீதிக்கு எதிரான போர் வெல்லட்டும் என்று அவர் கூறியுள்ளார்.