புதிரான உலகம்...Puthir.Com

ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது! வெளுத்து வாங்கிய சுப்பிரமணிய சுவாமி!

0 19

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு காட்சிகள் அரங்கேறியும் வருகின்றன.

மத்திய அரசு, தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெ.வுக்கு பிறகு தலைமையேற்ற சசிகலாவுக்கு, எதிராக களமிறங்கிய தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவு அதிர்ச்சியளிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை; அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லை என்றும், ரஜினிகாந்த் எதிலும் ஒரு நிலையானவர் அல்ல என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் ரஜினிகாந்துக்கு எந்த ஒரு வாய்ப்புமே இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ள சசிகலாவுக்கு ரஜினிகாந்த் மூலமாக எந்த ஒரு சவாலும் வரப்போவதும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் வாக்காளர்கள் சுயமாக வாக்களிக்கக் கூடியவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக தமிழக பாஜகவை கலைத்துவிட்டு என்னிடம் கொடுத்தால் நிச்சயம் மாற்று அரசியலை உருவாக்கிட முடியும் என்று கூறியிருப்பது, தமிழக பாஜவின் தலைவர் பதவிக்காக சுப்பிரமணிய சுவாமி இவ்வாறெல்லாம் பேசி வருகிறார் என்று அவரது வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி, நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.