புதிரான உலகம்...Puthir.Com

யார் இந்த சசிகலா? அவரது ஆட்டம் ஆரம்பமானது எப்படி? வீட்டு வேலைக்கு வந்து இன்று…!!

0 15

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு சசிகலாதான் காரணம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அதிமுக மூத்த தலைவர்கள் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சசிகலா யார்? எம்.ஜி.ஆர் அவர்கள் ஜெயலலிதாவுக்கு உதவியாக வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் என்று நடராஜனிடம் கூறி உள்ளார். உடனே அந்த நடராஜன் தன் மனைவியான சசிகலாவை வீட்டு வேலைக்கு அனுப்பி உள்ளார்.

அவ்வாறு அனுப்பப்பட்ட சசிகலா ஜெயலலிதா வீட்டில் அவரிடம் நெருங்கி பழகி உள்ளார். எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஆட்சி ஜெயலலிதாவின் கைக்கு வர சசிகலாவின் ஆட்டம் ஆரம்பமானது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவ்வப்போது போயஸ் கார்டனுக்கு வந்து செல்வது பிடிக்கவில்லை. தீபா வளர வளர ஜெயலலிதாவின் முகத் தோற்றம் தெரிய ஆரம்பித்தது.

ஆகையால் ஜெயலலிதாவின் அண்ணன் இறந்த பிறகு அவரின் உறவு முறையையும் துண்டித்து விட்டனர். அதன்பின் சசி குடும்பம் மட்டுமே ஜெயலலிதாவை சுற்றி இருந்தது. ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு வர முக்கிய காரணம் சசி குடும்பம்தான். சசிகலாவின் சகோதரி வணிதாமணியின் மகன் திவாகரனை தத்தெடுக்க வைத்து ஒரு பிரம்மாண்ட திருமணத்தை தமிழகத்தில் நடத்தினார்கள். அதுதான் ஜெயலலிதாவின் சரிவிற்கு ஆரம்பமாக அமைந்தது.

இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட ஜெயலலிதா இவர்களை ஒதுக்க ஆரம்பித்தார். இவ்வாறு பல முறை போயஸ் கார்டனில் இருந்து துரத்தப்பட்டவர்தான் இந்த சசிகலா. இப்படி ஒவ்வொரு முறையும் சசிக்கலாவையும் துரத்தியதற்கான காரணம் துரோகம்.

இப்படி ஒவ்வொரு முறையும் துரத்திய பிறகு அவர் எப்படியும் மீண்டும் வந்து சேர்ந்து விடுகிறார். இந்த முறை அவர் ஜெயலலிதாவை எதிர்க்கும் அளவிற்கு துணிச்சல் வந்து விடுகிறது. கடைசியாக போயஸ் கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதா என்ன காரணத்திற்க அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் என்பதில் பல மர்மங்கள் உள்ளது. இந்த மர்மங்கள் வெளிவர வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.