புதிரான உலகம்...Puthir.Com

கோவை அருகே பாம்புடன் பேசிய குழந்தை? வைரல் சம்பவம்!!

0 15

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள காரமடையில்  சுமார் 1,000 ஆண்டு பழமை வாய்ந்த ரங்கநாதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை போட்டுவிட்டு கை கழுவச்சென்ற தம்பதியினர் திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

அந்த குழந்தையை கோயிலில் இருந்த பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு குழந்தையிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும் பிறகு அங்கிருந்து சென்று விட்டதாகவும், மேலும், அந்த தம்பதியினரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும், அவர்கள் வீடு திரும்பிய பிறகு நீதிமன்றத்திலிருந்த வீட்டின் வழக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்புடன் பேசிய குழந்தை
பாம்புடன் பேசிய குழந்தை