புதிரான உலகம்...Puthir.Com

ராம்குமாரின் மர்ம மரணம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாக்கப்பட்டது…! சிறை தாதாக்களின் பிடியில் சில கைதிகள் நிலை..?

0 10

ராம்குமாரின் மர்ம மரணம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தாக்கப்பட்டது. இரண்டும் வேறு வேறு சிறைகள். ஒன்று சென்னை புழல். இரண்டாவது வேலூர் சிறை. இன்னும் செய்தியாக வெளிவராமல் பல மாவட்ட சிறைகளிலும் இது தான் நிலைமை என்கிறார்கள்.வெளியே இருக்கும் பழைய கைதிகள்.

இது பற்றி அவர்கள் கூறும் போது.பணவசதி உள்ள கைதிகளுக்குத் தான் உள்ளே ராஜ மரியாதை.

அவர்கள் விரும்பும் எல்லாவசதிகளும் கிடைக்கும். அவர்கள் வைத்ததுதான் சட்டம்.அங்கு தான் பல சதி திட்டங்கள் உருவாகிறது.ஸ்கெட்ச் போடுவதும் அங்கு தான். ஆனால் அதற்கு மாறாக வசதி இல்லாத, கைவிடப்பட்ட கைதிகளின் நிலை பரிதாபம்.கிட்டத்தட்ட அடிமைகள்தான் .

வாய் திறக்க முடியாது.எதுவும் பேச முடியாது.அப்படி பேசி விட்டாலோ, எதிலும் மூக்கை நுழைத்தாலோ முடிந்துவிடும் கதை. அடித்து துவம்சம் செய்து விடுவார்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அமைதியாக இருந்து விட்டு வெளியே வந்துவிட வேண்டியதுதான். இப்படி சொல்லி பகீர் கிளப்புகிறார்கள். என்ன சொல்வது..சிறையில் கூட பாது காப்பு இல்லை என்றால் வேறு எங்கு பாதுகாப்பு.