புதிரான உலகம்...Puthir.Com

ராம்குமார் எழுதிய கடிதம்….? சுவாதி யார் என்றே எனக்கு தெரியாது….. சென்னையில் கலவர சூழல்! பல்லாயிரம் பேர் திரண்டனர்

0 17

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியதும் தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டம் கொந்தளித்தது. சாலை மறியல், போராட்டம் என நகரமே ஸ்தம்பித்தது.

தற்போது இந்த கொலை சம்பந்தமாக மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் சுவாதி என்ற பெண் யாரென்றே எனக்கு தெரியாது என்றும் சுவாதியை நான் ஒரு தலை பட்சமாக காதலித்தேன் என்பது பொய் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விஷயத்தில் தன்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்….

இந்நிலையில் அவரது உடலை பார்க்க அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால் உடலை பார்க்க அவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இதனால் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும், ராம்குமார் வழக்கறிஞர் மற்றும் அவருக்கு ஆதரவான தரப்பினரும் உள்ளே செல்ல அனுமதி கேட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுள்ளதால் கலவர சூழல் நிலவுகிறது.