புதிரான உலகம்...Puthir.Com

சிறு வயது ஞாபகங்களை மீட்டி பார்க்க வைத்த கிள்ளி நுள்ளி

0 22

சிறுவயதில் கண்டிப்பாக நாம் உட்கார்ந்து விளையாடி இருப்போம்! காலக்கட்டத்தில் வளர வளர அந்த சிறுவயதில் பிடித்த பாடல் விளையாட்டுகளை அப்படியே மறந்தும் போனோம்.

ஆனால் வழக்கொழிந்து போன எங்கள் சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்களின் நவீன தொகுப்பாக நேற்றைய தினம் கிள்ளி நுள்ளி பாடல் வெளியீடு செய்யப் பட்டது.

பொங்கலை சிறப்பிக்கும் வண்ணம் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலியில் இருக்கும் சைவ சிறுவர்கள் இல்லத்தில் வைத்து இந்தப் பாடல் வெளியீடு செய்யப்பட்டது. மிகச்சிறந்த வரவேற்ப்பு இந்தப் பாடலுக்கு வெளியானதில் இருந்து கிடைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மறந்த நினைவுகளை ஆவணமாக்கும் பணியில் இதை உருவாக்கியுள்ளனர்.