புதிரான உலகம்...Puthir.Com

தம்பி நாம் போர் செய்து சாதிக்க முடியாது…… போரை நிறுத்தி விடுவோம்…… சொன்னார் பாலசிங்கம் அதிர்ந்தார் பிரபாகரன்?

0 17

இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னா. இவர் மீண்டும் சர்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். இலங்கையர்கள் கருத்துகளம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இவர் உரையாற்றும் போது,
இலங்கையில் தற்போது நல்லிணக்கம் இருக்கின்றதா என்பது சந்தேகமே, வடமேற்கிற்கு ஒரு நீதியும், தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகிறது.
யுத்தம் இல்லை நிறைவடைந்து விட்டது. குண்டுகள் வெடிக்கவில்லை. ஆனாலும் பிரச்னை என்ன என்றால் உனக்கு உள்ளது எனக்கு இல்லை என நினைப்பதே ஆகும்.
இதே வேளை கடந்த ஆட்சியாளர்கள் அனைவரும் பிரபாகரன் பேச்சை கேட்க ஆயத்தமாக இருந்தனர். தற்போதைய பிரதமரும் சமாதானத்தை நோக்கியே சென்றனர். சுனாமியின்போது பெருமளவில் பணம் விடுதலைபுலிகளுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தம்பி நாம் போர் செய்து சாதிக்க முடியாதது. தற்போது கிடைத்துள்ளது.
எனவே போரை நிறுத்தி விடுவோம் அடித்து கொள்வதை விடவும் பெரிய பேக்கேஜ் தற்போது கிடைத்துள்ளது நிறுத்தி கொள்வோம் என்றார். ஆனாலும் பிரபாகரன் அதனை ஏற்று கொள்ளவில்லை. அதுவே எங்களுக்கு சாதகமாகி விட்டது என கமல் குணரத்னா கூறினார்.

VUUKLE_EMOTE_IFRAME = "180px"