புதிரான உலகம்...Puthir.Com

திருமணமான இலங்கைப் பெண் தகாத உறவு: சவுதியில் மாட்டியதால் மரண தண்டனை- பெற்றார்!

0 23

சவுதி அரேபியாவில் பணி புரியச் சென்ற இலங்கைப் பெண். அங்குள்ள அண் ஒருவரோடு தகாத உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைதானார். அன் நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனையை வழங்கியது. அதுவும் கல்லால் எறிந்து இவரைக் கொல்லவேண்டும் என்பதே அந்த தண்டனை ஆகும். இதேவேளை இலங்கை அரசு இதில் தலையிட்டு. மேன் முறையீடு ஒன்றை மேற்கொண்டதோடு. ராஜதந்திர ரீதியிலும் பல அழுத்தங்களை சவுதி அரசுக்கு கொடுத்து வந்து. இன் நிலையில் மேல் நீதிமன்றம் 1000 கசை அடி. 3 வருட சிறைத்தண்டனை என அவரது தண்டனையை குறைத்து தீர்ப்பு வழங்கியது.

இதனை அடுத்து 1000 கசை அடிகளை வாங்கி, பின்னர் 3 வருடங்கள் சவுதி சிறையில் இருந்த குறித்த இலங்கைப் பெண். தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் சவுதிப் பொலிசாரால் நாடு கடத்தப்பட்டு தற்போது இலங்கை சென்றுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் அவரோடு கள்ளத் தொடர்பில் இருந்த ஆணுக்கு பெரிய தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். முஸ்லீம்களின் சட்டப்படி, பெண்கள் தவறு செய்தால் அது பெரும் தவறாக உள்ளது.