புதிரான உலகம்...Puthir.Com

18 வயதுப் பெண்ணை மிரட்டி 2 வருடமாக உறவுவைத்த ஆண்கள்: இறுதியில் எப்படி மாட்டிக்கொண்டார்கள் தெரியுமா?

0 16

பொல்காவலை பிரதேசத்தில் 18 வயதான பெண்ணொருவரை இரண்டு வருட காலமாக துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சந்தேகநபர்கள் இருவரும் திருமணமானவர்கள் எனவும் , பாட்டியுடன் வசித்து வந்த யுவதியையே மிரட்டி துஷ்பிரயோகம் செய்துள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அண்மையில் யுவதியின் வீட்டுக்கு குடிபோதையில் சென்றுள்ள அவர்கள் அவரை மோசமாக தாக்கியுள்ளனர்.இதனையடுத்து அவர் கூச்சலிட்டு ஊராரின் உதவியை நாடியுள்ளார்.இதனைக் கேட்ட ஊர்வாசிகள் சந்தேகநபர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
யுவதியின் தாய் வெளிநாட்டில் பணி புரிந்து வருவதாகவும் , தந்தை சில வருடங்களுக்கு முன்னர் காலமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப் பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.