புதிரான உலகம்...Puthir.Com

இலங்கைக்கு நிவாரணப்பொருட்களுடன் இரு இந்திய கப்பல்கள் வருகை

0 27

இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தியாவிலிருந்து நிவாரணப்பொருட்களுடன் இரு கப்பல்கள் கொழும்பிற்கு வந்துள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய பிரமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா எப்போதும் இலங்கை மக்களுக்கு உதவும் எனவும் சகல விதத்திலும் உறுதுணையாக இருக்குமெனவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு அவசர நிவாரணகள் வழங்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையின் பேரிலே நிவாரண கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பித்தக்கது.