புதிரான உலகம்...Puthir.Com

இலங்­கையில் தணியாத “ரோணு” சூறாவளி…! அடை மழை பெய்யும் அபாயம்…! தொடரும் எச்சரிக்கை

0 12

‘ரோணு’ சூறாவளியால் இலங்­கையின் தென் மேற்குப் பகு­தியில் இன்று பலத்த காற்­றுடன் கூடிய அடைமழை பெய்யும் அபாயம் உள்ளதாக காலநிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது.

இலங்­கையின் வட­மேற்கு, மேற்கு, மத்­திய மற்றும் சப்­ர­க­மு­வ ­மா­கா­ணங்­க­ளிலும், காலி,மாத்­த­றை­ மா­வட்­டங்­க­ளிலும் மழை­யோ­ அல்­லது இடி­யு­ட­ன் கூ­டிய மழையோ அவ்­வப்­போது பெய்யும் அறி­குறி உள்­ளது.

அநு­ரா­த­புரம் மற்றும் அம்­பாந்­தோட்­டை­மா­வட்­டங்­க­ளிலும் ஏனைய சில­பி­ராந்­தி­யங்­க­ளிலும் பிற்­பகல் வேளையில் மழை­யோ­ அல்­லது இடி­யுடன் கூடி­ய­ ம­ழையோ பெய்­யக்­கூடும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இடி­யுடன் கூடி­ய­ ம­ழை ­பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்­த ­காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டும் கால நிலை அவதான நிலையம் மின்னலினால் ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.