புதிரான உலகம்...Puthir.Com

கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் படுகொலையான முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் ஆரம்பம்

0 16

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 9.00 மணியளவில் வடக்கு மாகாணசபை ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெறுகின்றது.

இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுள்ளது.

வடமாகண முதலமைச்சர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நினைவு தினத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களிலும் இன்று காலை 6.00 மணிமுதல் 9.00 மணி வரை யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளில் மக்கள் ஈடுபட்டனர்.

2009ம் ஆண்டு இதே நாள் சர்வதேச யுத்த விதிகளை மீறி கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் இன்றைய நாளாகும்.

தொடர்ந்து மாலை 5.00 மணி வரை மேற்படி நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.