புதிரான உலகம்...Puthir.Com

இளவயது, நடுத்தர வயது ஆண்களின் செக்ஸ் உணர்வு எப்படி இருக்கும்? ஓர் பார்வை இதோ!

0 6

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறும் மத்தாப்பை போன்றது அந்த வயது.

ஒரு 20 வயதில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உடலுறவில் ஈடுபடுவதற்காக ஏங்குவாள்.

செக்ஸ் உணர்வு
செக்ஸ் உணர்வு

ஆனால் நடுத்தர வயதில் உள்ள கணவன் இயல்பாகவே மெதுவாகவும், நிதானமாகவும் செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உடலுறவில் அதிக நேரம் நீடித்திருப்பான்.

சிகாகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது: 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.

மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான். கவர்ச்சியைக் கண்ணால் பார்த்தாலேயே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிர்கின்ற போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்த நிலைக்குத் தூண்ட முடியும்.

எனவேதான் இந்த வயதுடையவர்கள் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் மிகவும் உதவிகரமாக அமைகின்றது. இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுத்தர வயதை பொறுத்தவரையில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.

காரணம் ஆண் பெண் இருவரது உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன.

ஆண்களுக்கு இவை இரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவாக இருக்கும்போது எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆண்களை காட்டிலும் நடுத்தர வயது பெண் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.