புதிரான உலகம்...Puthir.Com

மனைவியுடன் உடலுறவு கொள்வதில் தயக்கமாக இருக்கிறது – ஒரு கணவரின் குமுறல்? என்ன செய்வது?

0 17

உங்களுடைய இல்லற வாழ்க்கையில் வெளிச்சம் இல்லையா? உங்கள் கணவர் உடலுறவு தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை காட்டவில்லையா? அல்லது அவருக்கு திருமணம் தொடர்பான போதிய அறிவில்லை என்று நினைக்கின்றீர்களா?

இப்படி, பல்வேறு கேள்விகள் சில பெண்களின் திருமண வாழ்க்கையில் எழும். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு முன்பு, திருமண உறவு தொடர்பான கவுன்சிலிங் பெற்றிருக்க வேண்டும்.

அதுவே, இருவருக்கிடையே மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நல்ல புரிதல்களை ஏற்படுத்தும். இல்லையென்றால், அந்த திருமண வாழ்க்கை சிறிது நாட்களில் பிரச்சனைகளை உருவாக்கி, விவாகரத்து வரை கொண்டு போய் சேர்த்திடும்.

சரி. திருமணம் முடித்த பின்பு, ஆணுக்கு திருமண உறவு தொடர்பான போதிய அறிவு இல்லையென்றால், என்ன செய்வது? என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு எழும்.

உறவுமுறை ஆலோசகர் மற்றும் உளவள பேச்சாளர் அனில் சேத்தி கூறும்பொழுது, முறையான திருமண ஆலோசகரை அணுகி, “உங்களுடைய கணவருக்கு திருமணம் தொடர்பான போதிய அறிவை கொடுங்கள்” என்று கூறுகின்றார்.

மேலும், இது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குகின்றார். அதைப்பற்றி நாம் இப்போது பார்ப்போம்.

  1. அதாவது, திருமண வாழ்க்கையில் உங்களுடைய துணையிடம் இருந்து வர வேண்டிய முக்கியமான ஒன்று தான் தொடர்பு. அவர் எதிர்மறையான சிந்தனை, மன அழுத்தம் மற்றும் அவமரியாதை செய்யக்கூடியவராக இருந்தால், அவர் குழந்தைத்தனமானவரே. உடனே, இவருக்கு முறையான சிகிச்சை செய்ய முயற்சி செய்யுங்கள்.
  2. உங்களுடைய துணை வேறு ஒருவரோடு உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களை புறக்கணிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார் என்றால், அவர் உங்களிடம் ஏதோ பிரச்சனையை பார்க்கின்றார் என்று அர்த்தம்.

அதனால், உங்களிடம் உள்ள பிரச்சனைகள் என்ன என்று கண்டுபிடியுங்கள். அதை சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

  1. உங்கள் துணையிடம் சில வேறுபாடுகளை கண்டால், அதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவரிடம் சொல்லி, ஆலோசனை பெறுங்கள்.
  2. உடலுறவு விஷயத்தில் தினமும் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால், அதை உடனே சரிப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள்.
  3. குடும்ப உறவுகளோடு உங்கள் துணையை ஈடுபடுத்த முயற்சி செய்யுங்கள். அதிக நேரம் உங்கள் துணையோடு நேரம் செலவழித்து, மனம் விட்டு பேசுங்கள்.