புதிரான உலகம்...Puthir.Com

உங்களுக்கு அத்தை பெண் இருக்கா? அப்போ கை குடுங்க பாஸ்

0 50

ஆண்கள் எவ்வளவுதான் முரடர்கள் என்று பெயர் எடுத்தாலும் அவர்களின் மென்மையான பக்கம் காதலிக்கு தான் தெரியும். அதிலும் அந்த காதலி அத்தை பெண்ணாகவே இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான். பொதுவாக ஆண்களில் காதலித்து தோல்வி அடைந்தவர்கள்,வெற்றியடைந்தவர்கள் என்று இருப்பதை போல் காதலை சொல்லாதவர்களும் இருப்பார்கள். அத்தை பெண் இருந்தால் இந்த கவலையே தேவையில்லை. அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளேனு ஜாலியா பாடிக்கிட்டே இருக்கலாம்.

சின்ன வயசுலேயே உனக்கு அவ தான், அவளுக்கு நீ தான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் உசுப்பு ஏற்றி விடுவார்கள். சிறுவயதில் நாம் அதை ரசிக்கவில்லை என்றாலும், காலப்போக்கில் அதன் காரணமாகவே மனதில் பட்டாம்பூச்சி பறக்கும். அதுவும் இல்லாமல் போட்டியே இல்லாமல் நமக்கு ஒரு பொண்ணு காத்திருப்பாள் என்றால் சும்மாவா.

குறிப்பாக ஆண்கள் தங்களின் குறும்பு தனத்தையும், விளையாட்டு தனத்தை பெண்களிடம் காட்ட அதிகம் விரும்புவார்கள். எனவே அத்தை பொண்ணு இருந்தால் சின்ன சின்ன சண்டைகள், கேலிகள், வம்புகள் ஆகியவை செய்யலாம். இதுவே வெளி பெண்கள் என்றால் ”மாமியார்” வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். உங்களின் வீரத்தை வெளியுலகுக்கு காட்ட கட்டாயம் அத்தை பெண்கள் தேவை. அப்போது தான்,”யாரா என் அத்த பொண்ணு பின்னாடி சுத்துறது“ அப்பிடி இப்பிடினு எரியால கெத்து காட்ட முடியும். கடைசியா, மாமா, அத்தான், என்று இனிமையாக கூப்பிடும் அழகுக்கே கண்டிப்பாக ஒரு அத்தை பெண் வேண்டும். என்ன நான் சொல்லுறது…