புதிரான உலகம்...Puthir.Com

அசின் – ராகுல் காதல் திருமணம், வெளிவராத தகவல்கள்!

0 29

தமிழ் திரையுலகில் எம்.குமரன் S/o மகாலட்சுமி எனும் திரைப்படத்தின் மூலம் தனது குறும்புத்தனம் நிறைந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அசின். தமிழ் மட்டுமின்றி இந்தி கஜினியும் இவரது திரையுலகின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இவரது அந்த சுட்டித்தனம் நிறைந்த நடிப்பு அமீர்கான் எனும் நடிப்பு திமிங்கிலத்தை கவர்ந்து இந்திக்கு படையெடுத்தார் அசின் கஜினி மூலம்.

பிறகு விஜயுடன் காவலனில் மட்டுமே தரிசித்துவிட்டு வட இந்தியா நோக்கி முற்றிலுமாக நகர்ந்தவர் திரும்பியே பார்க்கவில்லை. பத்திரிக்கைகளின் பார்வையில் இருந்து தலைமறைவாக இருந்த அசின் திடீரென காதல் வாழ்க்கையில் விழுந்ததன் மூலமாக பிரகாசமான பிரபலம் அடைந்தார். அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து, தன் இல்லற பயணத்தை தொடங்கிவிட்டது.

அசின் மற்றும் ராகுலின் காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் அதன் மூலம் என்ன காதல் டிப்ஸ் கிடைக்கிறது என்பதை பற்றி இனிக் காணலாம்…

அக்ஷய் குமார்

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் தான் ராகுலுக்கு அசினை அறிமுகப்படுத்தி வைத்தேன், ஆனால் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததற்கு நான் காரணம் இல்லை” என அக்ஷய் கூறியிருந்தார்.

டிப்ஸ்

சில சமயங்களில் தெரிந்தோ, தெரியாமலோ காதல் மலர மூன்றாம் நபர்கள் கூட காரணமாக இருக்கலாம்.

கில்லாடி 786

ராகுல் மற்றும் அக்ஷய் முன்பிருந்தே நண்பர்கள். கில்லாடி 786 என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அசினும் அக்ஷய்க்கு அறிமுகமானார்.

ஆச்சரியமளித்த ராகுல்

தான் இந்தியாவின் முன்னிலை நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும் கூட எந்த கௌரவமும் பாராமல். 20 காரட் சொலிடர் வைரம் பதித்த மோதிரத்தை மண்டியிட்டு பரிசளித்து காதலை வெளிப்படுத்தினார் ராகுல். இப்படி தான் தொடங்கியது இவர்களது காதல் கதை.

டிப்ஸ்

நீங்கள் விரும்பும் பெண்ணை ஏதேனும் ஓர் சூழலில் ஆச்சரியப்படுத்துங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கை இனிக்காது போன்ற எண்ணம் அவர்களது மனதில் எழ வேண்டும்.

சொலிடர் வைரம்

ராகுல் அசினுக்கு பரிசளித்த சொலிடர் வைர மோதிரத்தின் விலை ஏறத்தாழ 6 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

தனித்தன்மை

ராகுல், அவரவர் வசதிக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமே தவிர, வேலை, அலுவலகம் என்பதற்காக இப்படி தான் உடை அணிய வேண்டும், இப்படி தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. இதை தான் அலுவலகத்திலும் பின்பற்றுவாராம்.

டிப்ஸ்

பெண்களை கவர ஒவ்வொரு ஆணிடமும் ஏதேனும் தனித்தன்மை இருக்க வேண்டும். பெரும்பாலும் மற்ற ஆண்களை போல் இல்லாமல்ஏதேனும் ஒரு விஷயத்தில் தனித்து காணப்பட்டாலே அந்த ஆண் மீது பெண்களுக்கு சிறிய ஈர்ப்பு ஏற்பட்டு விடும்.

ராகுல் ஷர்மா

ராகுல் ஷர்மா மெக்கானிக்கல் மற்றும் காமர்ஸ் பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அந்த ஆண்டின் சிறந்த நபராக அறிவிக்கப்பட்டார். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை 10,000 டாலர்களில் இருந்து 36 மில்லியன் டாலர்களுக்கு உயர்த்த முக்கிய காரணமாக இருந்தார். மற்றும் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

டிப்ஸ்

பணக்காரன் என்பதைவிட வெற்றியாளனாக இருக்கும் ஆண்களையே பெண்களுக்கு மிகவும் பிடிக்கிறது. தோல்வியடைவது இயல்பு ஆனால், ஏன் தோல்வியுற்றோம் எனக் கூட தெரியாமல் இருக்கும் முட்டாள்களை பெண்கள் எப்போதும் விரும்புவதில்லை.