புதிரான உலகம்...Puthir.Com

திருமணம் முடிந்த நாளன்று மனைவியிடம் பேசக்கூடாத விஷயங்கள்…!!!

0 90

கணவன் மற்றும் மனைவியின் உறவுகளில் முக்கியமான ஒன்று தான் முதல் இரவு. அவர்களுக்குள் அன்று பரிமாறக்கூடிய விஷயங்கள், வாழ்க்கையின் முக்கியமான கட்டமாகும்.

அதனால், மனைவியிடம் நாம் அன்று பேசக்கூடிய விஷயங்கள், காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று சொல்லுவார்கள். அதனால், வரக்கூடிய மனைவியிடம் தேவையில்லாத விஷயங்களை கேட்டு, பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேப்போன்று, கேள்விகள் தான் ரொம்ப முக்கியம். தேவையில்லாத கேள்விகளை கேட்டு தொந்தரவு செய்யாமல், என்ன விஷயங்கள் தேவையோ அதை மட்டுமே கேட்க வேண்டும்.

முதல் நாளில் மனைவியிடம் கேட்கக் கூடாத விஷயங்கள்

  1. முதலில் பேசும் போதே தன் மனைவியிடம் தன்னுடைய அல்லது அவர்களின் பழைய வரலாறுகளை பற்றி கேட்கவோ அல்லது அதைப்பற்றியோ கிளறக்கூடாது.
  2. தன் மனைவியிடம் முலில் பேசும் போது, தன்னைப்பற்றிய சுயபுராணம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
  3. புதிதாக வந்த தனது மனைவியிடம், தங்களின் குடும்பத்தை பற்றி பெருமையாக கூறக்கூடாது. அப்படி இல்லையென்றால் அவளும் அவள் குடும்பத்தை பற்றி பெருமையாக கூற ஆரம்பிப்பாள்.
  4. திருமணம் முடிந்த முதல் நாளிலே தனது மனைவியிடம் உடலுறவு பற்றி பேசக் கூடாது. ஏனெனில் உங்கள் மீதான நல்ல பிம்பத்தை உடைப்பதுடன், பெண்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தும்.
  5. தங்கள் மனைவியிடம் பணம் அதிகம் இருக்கிறது என்றும் அல்லது பொருளாதார கஷ்டத்தை வெளிப்படுத்துவது இரண்டுமே தவறானது. ஏனெனில் இவை இரண்டுமே எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும்.
  6. உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தை தாம்பத்தியத்தின் போது வெளிப்படுத்த வேண்டாம். மேலும் மனைவியிடம் பேசும் உரையாடலில் நீ, நான் என்ற பிரிவினை பேச்சுக்களை தவிர்த்து, நாம் என்ற வார்த்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.