புதிரான உலகம்...Puthir.Com

காதலில் நீங்கள் உச்சக்கட்டத்தை எட்டும் போது உடலில் ஏற்படும் 7 மாற்றங்கள்!

0 31

காதலிப்பவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், நல்ல கண் பார்வை, எலும்பு வலிமை, ஒரே மாதிரியான இதயத்துடிப்பு திறன் என பல வினோதமான விஷயங்கள் உன்னதமாக காதலிக்கும் தம்பதிகள் / காதல் துணைகள் மத்தியில் காணப்படுகிறது.

நமது ஊர்களில் தான் அக்கப்பக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது என ஆராய்வோம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் புல்பூண்டுகளில் இருந்து கண்ணில் படுவதை மனதில் தோன்றுவதை என அனைத்தையும் ஆராய்ந்து விடுவார்கள்.

மனதில் தோன்றுவது என பார்க்கும் போது, எல்லாருடைய மனதில் தோன்றும் காதலை ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியுமா என்ன? காதலை பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி கண்டறியப்பட்டவை…

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு
இதயத்துடிப்பு

கலிபோர்னியா பல்கலைகழகத்தின் சில ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 32 காதல் தம்பதிகள் கலந்துக் கொண்டனர். இதில், ஒருவருக்கு நேர் எதிர் ஒருவர் நிற்க வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று நிமிடங்கள் கண்களை மோடி எதிர் எதிரே நிற்க வேண்டும் இந்த ஆய்வின் போது இருவரின் இதயத்துடிப்பும் ஒரே மாதிரி இயங்குவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அணைத்துக்கொள்தல்!

அணைத்துக்கொள்தல்
அணைத்துக்கொள்தல்

காதலர்கள் கட்டியணைத்துக் கொள்வதால் வலிநிவாரணி சுரப்பி உடலில் அதிகம் சுரந்து, அவர்கள் உடலில் வலி குறைவாக உணர முடிகிறதாம். மெய்யாலுமே இதுக்கு பேரு தான் கட்டிப்பிடி வைத்தியம் போல!

கண்கள் விரியும்!

கண்கள்
கண்கள்

தாங்கள் அதிகம் விரும்பும் நபர்களை காணும் போது ஆண், பெண் இருவர்களுக்குமே கண்கள் பெரிதாக விரிகிறது. பெரும்பாலும், ஆண்கள் மத்தியில் தான் இது அதிகம் நடக்கிறது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இயற்கை இனிப்பூட்டி!

இனிப்பூட்டி
இனிப்பூட்டி

ஒரு வேடிக்கையான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 197 மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். இந்த ஆய்வில், மாணவர்களை காதல், பொறாமை, பகைமை குறித்து கடிதங்கள் எழுத கூறப்பட்டது. ஆய்வின் முடிவில் அனைவருக்கும் மிட்டாய்கள் வழங்கப்பட்டது. இதில், காதல் குறித்து கடிதங்கள் எழுதியவர்கள் தான் அதிகம் இனிப்பை உணர்ததாக கண்டறியப்பட்டது.

உணர்ச்சிவசம்!

உணர்ச்சிவசம்
உணர்ச்சிவசம்

அதிகமாக காதலை வெளிப்படுத்தும் நபர்கள் தங்கள் உணர்ச்சிவச நிலைகளில் வலிமையாக உள்ளனர். இவர்கள் அந்தந்த சூழலை எப்படி கையாள்வது என்றும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

எதையும் தாங்கும் இதயம்!

இதயம்
இதயம்

இதுவும் ஒரு விசித்திரமான ஆய்வு தான். 15 நபர்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 15 பேரின் கைகளிலும் சூடு வைக்கப்பட்டது. சூடு வைக்கப்பட்ட பிறகு அவர்களது கைகளில் அவர்கள் விரும்பும் நபரின் புகைப்படங்கள் தரப்பட்டது. இதில், காதலில் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் காதலிக்கும் நபர்கள் 15% வரை வலியை குறைவாக உணர்ந்தது கண்டறியப்பட்டது.

வலிமை!

வலிமை
வலிமை

25 மற்றும் அதற்கு மேலான வயதுடைய திருமணமான நபர்களில், தங்களுக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்கும் துணை கொண்டுள்ளவர்களின் எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்கிறது என UCLA ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.