புதிரான உலகம்...Puthir.Com

உங்கள் உறவு ஆரோக்கியமானதா, விஷத்தன்மையானதா என கண்டறிய வேண்டுமா?

0 15

ஒருவருக்கு ஒரு விட்டுக்கொடுத்து போவது தான் நல்ல இல்லறத்திற்கு அழகு. ஆனால், ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுத்து போவது என்பது நீங்கள் ஆரோக்கியமற்ற, விஷத்தன்மையுள்ள உறவில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை எடுத்துக் காட்டும் அறிகுறி ஆகும்.

நீங்கள் ஆரோக்கியமான உறவில் தான் இருக்கிறீர்கள் அல்லது விஷத்தன்மையான உறவில் தான் இருக்கிறீர்கள் என்பதை கண்டறிவது எப்படி? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோபாவம் இருக்கும்.

சிலரால் சின்ன, சின்ன விஷயங்களை கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்கள் உறவுமுறை கசக்கிறது என்று எண்ணுவார்கள். சிலர் எத்தனை தான் தங்களுக்கு பிரச்சனை வந்தாலும் உறவை கசந்துக் கொள்ளாமல் பிரிந்துவிடக் கூடாது என எண்ணுவார்கள்.

இவை இரண்டுமே தவறான அணுகுமுறை தான். உங்கள் சுய தன்மையை இழந்து வாழ்வது மிகவும் கொடுமையானது. எனவே, உங்கள் உறவு ஆரோக்கியமானதா, விஷத்தன்மையானதா என முதலில் அறிந்துக் கொள்ளுங்கள்…

தாழ்த்துவது

எந்த விஷயங்களிலும் தான் என்ற அகம்பாவம் செலுத்தி துணையை தாழ்த்தி பேசும் அல்லது தனக்கு கீழ் தான் என்ற வகையிலே நடத்தும் பழக்கம் ஆரோக்கியமான உறவல்ல. ஆண், பெண் இருவர் மத்தியில் சமநிலை இருப்பது தான் ஆரோக்கியமான உறவு.

தவிர்த்தல்
வெளியிடங்களுக்கு செல்லும் போது தங்களுடன் உங்களை கூட்டி செல்ல தவிர்ப்பது. உங்களை மறைமுக உறவாக மட்டுமே வைத்துக் கொள்வது போன்றவை ஆரோக்கியமான உறவுக்கான அறிகுறி அல்ல.
பிரச்சனைகள் பற்றி பேச மறுத்தல்
ஏதேனும் பிரச்சனை என்றால் அதை பற்றி பேசவோ அல்லது கலந்தாய்வு செய்யாவோ மறுப்பது, தவிர்ப்பது போன்றவையும் கூட ஆரோக்கியமான உறவில்லை. உங்கள் பிரச்சனையை தனித்து பார்க்கும் சுபாவம் விஷத்தன்மையுள்ளது ஆகும்.
கேவலமாக சண்டையிடுவது
ஆபாச வார்த்தைகள் கூறி, உங்களை மோசமான முறையில் துன்புறுத்தி சண்டையிடுவது போன்றவை நீங்கள் விஷத்தன்மையுள்ள உறவில் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
நீங்களாக இல்லாமல் இருப்பது
உறவில் இருக்கும் எந்த ஒரு தருணத்திலும், நீங்கள் நீங்களாக உணராமல், வாழாமல், எப்போதும் உங்கள் துணைக்கு ஏற்றப்படியே மாற்றிக் கொண்டு, உங்கள் சுய தன்மையை இழந்து வாழ்வது ஆரோக்கியமான உறவில் நீங்கள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
பெற்றோர் பேச்சை மட்டும் கேட்பது
பெற்றோர் பேச்சை கேட்பது தவறல்ல. ஆனால், உங்கள் பக்கம் இருக்கும் கருத்து மற்றும் நீங்கள் கூறுவதையும் கேட்கும் தன்மையும் இருக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாகவே எப்போதும் செயல்படுவது, உங்கள் உறவை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ளாது.
வேண்டும் எனும்போது மட்டும் அணுகும் முறை
அவர்களுக்கு உங்களால் ஏதேனும் வேண்டும் எனும் போது மட்டும் உங்களிடம் வருவது, கொஞ்சி பேசுவது. அவர்களது வேலைகளை செயலாக்கம் செய்துக் கொள்ள உங்களை பயன்படுத்திக் கொள்வது என இருப்பது ஆரோக்கியமான உறவில் நீங்கள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
மறைத்து வைப்பது
நீங்கள் காதலிப்பதை யாருடனும் கூறாமல், இரகசியமாகவே வைத்துக் கொள்வது, வெளி நபர்கள் மத்தியில் வேற்று ஆள் போல காட்டிக் கொள்வது போன்றவை ஆரோக்கியமான உறவில் நீங்கள் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் அறிகுறிகள் ஆகும்.