புதிரான உலகம்...Puthir.Com

உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினால், பெண்ணுறுப்பில் ஏற்படும் 7 வினோத மாற்றங்கள்!?

0 215

உடலுறவு சார்ந்த விஷயங்களில் பெரும்பாலும் யாரும் சந்தேகங்களை மருத்துவரிடம் சென்று கேட்க தயக்கம் கொள்கின்றனர்.

எனவே, நெருங்கிய நண்பர், அலுவலக தோழர்களிடம் கேட்டு தெளிவு பெற முனைகின்றனர். இங்கு தான் குழப்பம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அந்த நபரும் கூட மருத்துவரை அணுகாது, யாரோ ஒருவர் கூறியதை தான் நம் காதில் பூவாய் சுற்றுவார். இதன் காரணமாக உண்மை எது என தெரியாமல், நாமும் குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருப்போம்.

உடலுறவில் ஈடுபடும் போது சில பெண்களுக்கு பிறப்புறுப்பில் வலி ஏற்படலாம். இது ஏன், எதனால் என தெரிந்துக் கொள்ளாமல் தாம்பத்திய உறவை தவிர்ப்பது தவறு.

எனவே, உண்மை காரணம் என்ன என தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முக்கியமாக சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெளிவுப் பெறுங்கள்…

உண்மை #1

பெண்ணுறுப்பு

உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினால், பெண்ணுறுப்பு இருக்கமாகிவிடும் என சிலர் எண்ணுவது உண்டு. இது முற்றிலுமான மூடநம்பிக்கை, பொய். பெண்ணுறுப்பு எலாஸ்டிக் போன்ற தன்மை கொண்டதாகும்.

உண்மை #2

பெண்ணுறுப்பு

உடலுறவில் உச்சம் காண வேண்டும் என்றால் சற்று இடைவேளை எடுத்துக் கொண்டு பிறகு ஈடுபட வேண்டுமா என சிலர் சந்தேகிக்க கூடும். ஆனால், பெண்கள் உச்சம் காண்பதென்பது அவர்களது மூளையில் சுரக்கும் சுரப்பியை சார்ந்தது. இடைவேளை எடுத்துக் கொண்டு உறவில் ஈடுபட்டால் உச்சம் காணலாம் என்பது பொய்.

உண்மை #3

பெண்ணுறுப்பு

உடலுறவில் ஈடுபடும் போது இடைவேளை எடுத்துக் கொண்டு செயல்பட்டால் எதிர்செயல் மேலோங்கும் என சிலர் எண்ணலாம். ஆனால், இடைவேளை எடுத்துக் கொண்டால் வேட்கை வேண்டுமானலும் அதிகரிக்கலாமே தவிர, உச்சம் காண்பது, இன்பம் போன்றவை அதிகரிக்கும் என கூற முடியாது.

உண்மை #4

பெண்ணுறுப்பு

உடலுறவு மற்றும் சுய இன்பம் காணுதல் போன்றவற்றில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டால் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் தாக்கம் ஏற்படலாம். வலியை அதிகமாக உணர நேரிடலாம். ஆம், உடலுறவு மற்றும் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிப்படும் எடோர்பின் வலிநிவாரணியாக திகழும். இது தடைப்படும் போது வலி அதிகமாக உணரலாம்.

உண்மை #5

பெண்ணுறுப்பு

சிலர் உடலுறவில் ஈடுபடுவதால் பெண்ணுறுப்பில் வலி உண்டாகிறது என உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து வருவார்கள். பெண்ணுறுப்பு சிறிதாக இருக்கும் பெண்களுக்கு இது நேரிடலாம். அப்படி இருப்பவர்கள், உடலுறவில் ஈடுபடும் போது ஃபோர்பிளாவில் ஈடுபடுவதால் வலி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

உண்மை #6

பெண்ணுறுப்பு

சில பெண்களின் பெண்ணுறுப்பு வறட்சியுடன் காணப்படும். இதனால், உடலுறவில் ஈடுபடும் போது வலி உண்டாகலாம். இதற்கு ஈரத்தன்மை ஏற்படுத்த எண்ணெய், அல்லது இதற்காகவே விற்கப்படும் பொருட்களை பயன்படுத்துங்கள். இது உராய்வு எற்படும்போது எரிச்சல் அல்லது வலி உண்டாகாமல் இருக்க உதவும். இதற்காக உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றில்லை.

உண்மை #7

பெண்ணுறுப்பு

பெண்ணுறுப்பும் தசைகளால் உருவான ஓர் உடல் உறுப்பு என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். உறவில் ஈடுபடும் போது அதிக வேகமாக செயல்படுதல் பெண்களுக்கு அதிக வலியை உண்டாக்கும். இதனால் அவர்கள் மறுமுறை உறவில் ஈடுபட தயங்கலாம், அச்சம் கொள்ளலாம்.