புதிரான உலகம்...Puthir.Com

இன்பமிகு உறவை அனுபவிக்கும் தம்பதிகள் மறக்காமல் செய்யும் 3 விஷயங்கள்!

0 30

இல்லறத்தில் ஆரம்பத்தில் இருக்கும் இன்பம், பாசம், அன்பு போக, போக குறைந்துவிடுகிறது என பலரும் புலம்புவதை நாம் காதுப்பட கேட்க முடியும்.

ஆனால், சிலரது இல்லறம் மட்டும் ஏதோ நேற்று தான் தாலிக்கட்டி குடித்தனம் பண்ண ஆரம்பித்தது போல எப்போதுமே மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

சிலருக்கு இது போன்ற தம்பதிகளை காணும் போது லைட்டாக வயிறில் எரிச்சல் கூட உண்டாகலாம். அது எப்படி? என்ற கேள்விகளும் எழும்.

நாம் செய்யும் தவறே, பழையதை மறப்பது தான். பள்ளியில் படித்த பல விஷயங்களை அதன் பயனை அறியாமல் கல்லூரியில் மறந்துவிடுவோம்.

ஆம், ஆரம்ப நாட்களில் நாம் கடைபிடித்து வந்த சில பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே இல்லறம் எந்நாளும் சிறக்கும்.

இதற்கு நீங்கள் ஒரு மூன்று விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது…

பேசும் திறன்…

பேசும் திறன்
பேசும் திறன்

இருவருக்குள்ளும் இருக்கும் ஓர் நல்ல தொடர்பு! பேசும் திறனை வைத்து நம்மை வெறுக்கும் நபர்களையும் நேசிக்க வைக்க முடியும். நேசிக்கும் நபர்களையும் வெறுக்க வைக்க முடியும். வார்த்தைகள் தான் கொடிய ஆயுதங்கள். இவை அணுகுண்டை விட பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.

நல்லவிதமா பேசுங்க…

நல்லவிதமா பேசுங்க
நல்லவிதமா பேசுங்க

உங்கள் கணவன் / மனைவியிடம் பேசும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள். தவறு செய்தாலும் நல்லவிதமாக எடுத்துரைக்க பழகுங்கள். இது, அவர்களை மீண்டும் அந்த தவறை செய்ய விடாமல் தடுக்கும். எனவே, ஓர் நல்ல பேச்சு முறை தான் ஓர் நல்ல உறவின் அடித்தளமாக அமையும்.

மனச படிக்கணும்…

மனச படிக்கணும்
மனச படிக்கணும்

மனதை படிக்க தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் செயல்களை அவர் விரும்புகிறார், வெறுக்கிறார், அவரது மனநிலை இவ்வாறு உள்ளது, அவரது மனதில் ஓடும் விஷயங்கள் என்ன? என்று பேசாமலேயே உங்கள் துணையின் மனதை படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தந்திரமேதுமில்லை…

தந்திரமேதுமில்லை
தந்திரமேதுமில்லை

இதுவொன்றும் மாய வித்தை இல்லை. மனதால் நீங்கள் இருவரும் சரியாக இணைந்திருந்தால், நேராக பார்க்க வேண்டும் என்றில்லை, அலைபேசியில் உரையாடும் போது கூட, அவர் எந்த மனநிலையில் உள்ளார் என அறிய முடியும்.

நன்றி சொல்ல உனக்கு…

நன்றி சொல்ல உனக்கு
நன்றி சொல்ல உனக்கு

கணவன், மனைவிக்குள் நன்றி கூறிக் கொள்ள கூடாது என்பார்கள். இது தவறு, நன்றி கூறிக் கொள்ள வேண்டும், பாராட்டிக் கொள்ள வேண்டும். ஒருவர் செய்யும் செயலை ஊக்குவிக்க வேண்டும். தவறு செய்தால் தட்டிக் கொடுக்க வேண்டும்.

பாராட்டுங்க…

பாராட்டுங்க
பாராட்டுங்க

ஒருவர் செய்யும் செயலை கண்டும் காணாமல், அதற்கான மதிப்பை அளிக்காமல் நாம் வெறுமென இருக்கும் போது தான் உறவில் அலுப்பு ஏற்பட துவங்கும். இந்த அலுப்பு தான் அன்பையும், அக்கறையையும் குறைக்க செய்யும். எனவே, நன்றி கூறுங்கள், பாராட்டுங்கள்.