புதிரான உலகம்...Puthir.Com

தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன!

0 28

உடலுறவையும் கூட நமது முன்னோர்கள் ஒரு கலையாக தான் கருதி எழுத்துக்களாகவும், சிற்பங்களாகவும் பல வடிவில் வடித்து வைத்து சென்றுள்ளனர். இந்தியாவில் பல கோவில் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களில் நாம் இதை காண முடியும்.

காமசூத்ராவில் இருந்து பார்ன் வரை அனைத்தையும் கரைத்து குடித்துவிடும் சில ஆண் மகன்கள் அவர்களது துணையிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது தான் உறவில் சில சிக்கல்கள் எட்டிப்பார்க்கும்.

இச்சை உணர்வு என்பது மிருகங்களிலிருந்து, மனிதர்கள் வரை அனைவர் மத்தியிலும் இயல்பு. ஆனால், மனது என்று ஒன்றிருக்கிறதே அதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டாமா?

தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் பெண்கள் உச்சமடையும் உணர்வை வலுவாக பாதிக்கின்றன….

உடலுறவு கொள்ளும் நிலை!

காமசூத்ரா
உடலுறவு கொள்ளும் நிலை!

காமசூத்திரம் எழுதியதே இந்தியர்கள் தான். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பது தவறு. உங்கள் துணையின் நிலையை சற்று யோசித்து, அவரும் ஓர் ஜீவன் என்ற மதிப்பு, மரியாதை அளித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

வற்புறுத்த வேண்டாம்!

காமசூத்ரா
வற்புறுத்த வேண்டாம்!

சில ஆண்கள் வற்புறுத்திக் கூட அவர்களுக்கு பிடித்த மாதிரி உடலுறவில் ஈடுபடுவது உண்டு. இதனால், அவர்கள் உச்சம் அடைவது தடைப்படுவதின்றி, பிறப்புறுப்பும் வலிமிகுந்ததாக உணர வாய்ப்புகள் உண்டு.

யோசிப்பது!

காமசூத்ரா

உடலுறவில் ஈடுபடும் போது, இடையே வேறு விஷயங்கள் பற்றி பேசுவது, யோசிப்பது. பல நேரங்களில் ஆண்கள் இந்த தவறை செய்வதுண்டு. உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சம்மந்தமே இல்லாத ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசுவார்கள். இது கண்டிப்பாக துணை உச்சம் அடைவதை தடுக்கும்.

வேகமாக செயல்படுதல்!

காமசூத்ரா

வேகமாக செயல்படுதல், அல்லது வேகமாக செயல்படும் போது திடீரென உடனடியாக உறவில் ஈடுபடுதை நிறுத்துவது! உங்கள் துணையும் ஓர் உயிர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி வேகமாக உடலுறவில் ஈடுபடுவது அவருக்கு மிகுதியான வலியை தரும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

திடீரென நிறுத்துவது!

காமசூத்ரா

மேலும், உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென நிறுத்துவது தான் அவர்களது உணர்ச்சி மற்றும் உச்சம் காணுதலை தடைப்பட்டு போக முக்கிய காரணமாக இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேறு வேலை!

காமசூத்ரா

உடலுறவில் ஈடுபடும் போது அல்லது ஈடுபட்டு முடித்த பின்னர் உடனே வேறு வேலை / விஷயங்களில் (டிவி, மொபைல்) கவனம் செலுத்த ஆரம்பிப்பது. ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது தான் உணர்ச்சி அதிகமாக வெளிப்படும்.

உணர்ச்சி மேலோங்குதல்!

காமசூத்ரா

ஆனால், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் உணர்ச்சி மேலோங்க ஆரம்பிக்கும். எனவே, உறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் துணையுடன் சிறிது நேரம் பேசியோ, கொஞ்சியோ நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம்.