புதிரான உலகம்...Puthir.Com

குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை மேம்படுத்துவது எப்படி? பெற்றோர்களுக்கான டிப்ஸ்

0 14

இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர் மற்றும் கேட்ஜெட்டுகளால், அழகான வாசிப்பு பழக்கம் மறைந்து விட்டது. பெற்றோர்களும் அவர்களிடம் வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை.

வாசிப்பு பழக்கத்தை பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே ஆர்வத்தை ஏற்படுத்தினால் தான், அவர்களிடம் வளர வளர அதிகமாகும். ஏனென்றால், அப்பொழுது தான் அவர்களின் பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள், மொழித்திறன் அறிவு, தகவல் தொடர்பு மற்றும் பேச்சாற்றல் போன்றவை வளர்ச்சியடையும்.

அப்படிப்பட்ட வாசிப்பு ஆர்வத்தை குழந்தைகளிடம் மேம்படுத்துவது எப்படி? என்பது தொடர்பான சில டிப்ஸ்களை பார்ப்போம்.

குழந்தைகளோடு வாசியுங்கள் – குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதில் முக்கியமானது, அவர்களோடு சேர்ந்து வாசிப்பது. தினமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் போது புகைப்படங்கள், முக்கியமான கருத்துக்களைப்பற்றி விளக்கங்களை கொடுக்க வேண்டும். தினமும் இரவு 20 நிமிடங்கள் இந்தப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அவர்களை வாசிக்க வைக்க வேண்டும் – வீட்டில் வாசிப்பை ஒரு கலாச்சாரமாகவே மேற்கொள்ள வேண்டும். அவர்கள் டிவி பார்க்கும் நேரம், செல்போன் பயன்படுத்தும் நேரங்களில் வாசிப்பதற்கு சொல்ல வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான புத்தகத்தை கொடுக்க வேண்டும்.

 

வற்புறுத்தல் கூடாது – குழந்தைகளுக்கு வாசிப்பதை ஒரு விளையாட்டாக எடுக்க வேண்டும். நீங்கள் வற்புறுத்தக்கூடாது. அதாவது, அவர்களிடம் நீ போய் நூலகத்தில் போய் அல்லது புத்தக அலமாரியில் போய் விரும்பிய புத்தகத்தை எடுத்துப்படி என்று சொல்ல வேண்டும்.

கேள்விகள் கேட்க வேண்டும் – ஒரே இடத்தில் அமர்ந்து உட்கார்ந்து புத்தகம் வாசிப்பது என்பது அலுப்பு தட்டக்கூடிய ஒரு விஷயம் தான். அதனால், நீங்கள் அவர்களிடம் இடைக்கிடையில் கேள்விகள் கேட்க வேண்டும், விவாதங்கள் நடத்த வேண்டும். அவர்கள் ஆர்வப்படும் விஷயங்கள் தொடர்பாக பாராட்ட வேண்டும். இதனால், குழந்தைகளிடம் வாசிப்பு ஒரு அலாதியான ஆர்வத்தை ஏற்படுத்தும்.