புதிரான உலகம்...Puthir.Com

குழந்தைகள் 13 வயதை தாண்டும்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

0 26

குழந்தைகள் 13 வயதை கடக்கும் பொழுது, அவர்கள் வளர் இளம் பருவத்தின் தொடக்கக்கட்டத்தில் இருக்கின்றார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

அந்தக்காலக்கட்டத்தில் தான் நீங்கள் உங்கள் குழந்தைகளை கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய நேரமாகும். குழந்தைகளை நீங்கள் பக்குவப்படுத்த வேண்டிய முறைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

அதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம்

  1. குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிடுங்கள் – குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் உலகத்தில், நண்பர்கள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் தான் அவர்களுக்கு எப்பொழுதும் முக்கியமாக இருக்கும்.

அதனால், குழந்தைகளோடு நீங்கள் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். அப்பொழுது, நீங்கள் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லலாம்.

உங்களிடம் ஏற்பட்டுள்ள இடைவெளியை போக்குவதற்கான, சிறந்த நேரம் தான் சாப்பாட்டு நேரம். அதை, எப்பொழுதும் தவற விடாதீர்கள்.

  1. நேரம் ஒதுக்குங்கள் – எவ்வளவு தான் வேலையாக இருந்தாலும், குழந்தைக்கு என்று நேரம் ஒதுக்குங்கள். ஏனென்றால், செல்போன் மற்றும் தொலைக்காட்சி என்று அவர்களின் நேரத்தை பிடுங்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில், அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை கேட்பதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும்.
  1. பகிர்ந்து கொள்ளுதல் – உங்கள் குழந்தைகளோடு நேரம் ஒதுக்கி, கலகலப்பாக இருங்கள். நம்முடைய பெற்றோர் ஒரு ஜாலியானவர் என்பதை உணர்த்துங்கள்.

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுங்கள். அரட்டை அடியுங்கள். குழந்தைகள் சிரிப்பதற்கு வழியை ஏற்படுத்துங்கள்.

  1. தொலைத்தொடர்பு சாதனங்களை பற்றி விளக்குங்கள் – கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப் போன்றவைகளின் பயன்பாடுகள் பற்றி விளக்குங்கள்.

அதனுடைய சாதகம் மற்றும் பாதகம் தொடர்பான விஷயங்களை புரிய வையுங்கள். அது, குழந்தைகள் தொலைதொடர்பு சாதனங்களை கவனமாக பயன்படுத்துவதற்கு உதவும்.

மேல் சொன்ன விஷயங்களை உங்கள் குழந்தைகள் 13 வயதை தாண்டும் பொழுது, தவறாமல் பின்பற்றுங்கள். உங்கள் குழந்தைகளின் வளர் இளம் பருவம் சிறப்பாக அமைவதற்கு உதவும்.