புதிரான உலகம்...Puthir.Com

விரதம் இருப்பதினால் செக்ஸில் சுறுசுறுப்பு மற்றும் நல்ல தூக்கம் !

0 12

உணவு உண்ணாமல் விரதம் இருப்பது உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய மதங்களில் பின்பற்றக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. எல்லா மதங்களிலும் விரதம் இருப்பது ஒவ்வொரு விதமான வழிபாட்டு நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உணவு உண்ணாமல் விரதம் இருப்பது வழிபாட்டு ரீதியான நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும், உடல் எடை குறையும் என்று இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். இதில் விஞ்ஞானிகள் புதுவிதமான கண்டுபிடிப்பை அறிவித்துள்ளார்கள்.

அதாவது, உணவு உண்ணாமல் விரதம் இருப்பதின் மூலம் மகிழ்ச்சியையும், செக்ஸில் ஆர்வத்தையும் மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தையும் தருவதாக கூறியுள்ளனர்.

லூசியானாவில் உள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தான் இப்படி ஒரு கண்டுபிடிப்பை அறிவித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. இதற்கு 218 நல்ல உடல் ஆரோக்கிமானவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் உணவு உண்ணவிடாமல் ஒரு குறிப்பிட்ட நாட்கள் இருந்துள்ளனர். அதில், அவர்களுக்கு கிடைத்த முடிவு என்னவென்றால், 10 சதவீதம் அவர்களின் உடல் எடை குறைந்துள்ளது.

அதாவது, ஒரு நபருக்கு 16.5 பவுண்ட் உடல் சதை குறைந்துள்ளது. அவர்களிடம் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாகவும், அமைதியான தூக்கம் கிடைத்துள்ளதாகவும் மற்றும் செக்ஸ் செயல்பாடுகளில் அதிக சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.

உண்மையில் இந்த ஆய்வுகள் மருத்துவ ரீதியாகவும் நிரூபணம் செய்துள்ளனர். அதனால், மருத்துவர்களும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதை அதிகப்படுத்துங்கள் என்று பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.