புதிரான உலகம்...Puthir.Com

கர்ப்பிணி பெண்களே சுகப்பிரசவம் நடைபெற அருமையான வழி இதோ!

0 33

ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பிரசவமானது, அவர்களுக்கு மறுபிறவி என்று கூறுவார்கள்.

கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள்.

எனவே கர்ப்பிணி பெண்களுக்கு எளிமையாக சுகப் பிரசவம் நடைபெறுவதற்கு, நார்த்தம் பழம் முக்கிய பங்கினை வகிக்கிறது.

சுகப்பிரசவத்திற்கு நார்த்தம் பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • கர்ப்பிணி பெண்கள் நார்த்தம் பழத்தின் சாறு எடுத்து தண்ணீர் கலந்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் தொடர்ந்து குடித்து வந்தால், சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.
  • நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால், நமது உடல் எப்போதும் வலிமையாக இருக்கும்.
  • நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து, அதை வெந்நீர் கலந்து அடிக்கடி குடித்து வந்தால், கடுமையான வாயுத் தொல்லையில் இருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் பிரச்சனையும் தடுக்கப்படும்.
  • தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால், நமது உடல் சூடு தணிந்து, புத்துணர்வு கிடைக்கும். மேலும் பித்தம் மற்றும் ரத்தமும் அசுத்தமடைதல் போன்ற பல நோய்களும் தடுக்கப்படும்.