புதிரான உலகம்...Puthir.Com

தாய்மார்களே குழந்தை பாக்கியம் பெற.. என்னல்லாம் பண்ணலாம்.. பெண்களுக்கு மட்டும்..!

0 49

பெண்களுக்கு தாய்மை என்பது புனிதமானது. உலகில் அனைவராலும் போற்றக்கூடியவர்கள் பெண்கள் மட்டுமே. திருமணம் முடிந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.

சில வீடுகளில் பெண்களுக்கு திருமணம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் அவர்கள் தாய்மை அடையாமல் இருக்கலாம். இதற்காக கோவிலுக்கு சென்று வழிபடுவர். அவ்வாறு பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உடல்நிலையே காரணம்.

மேலும், ஒரு பெண் குழந்தை பாக்கியம் அடையவில்லை என்றால் அந்த பெண்ணுக்கு மலடி என்று பட்டம் கட்டி விடுகின்றனர். இதற்கு பெண்கள்தான் காரணம் என்று நினைக்க வேண்டாம்.

ஆண்களுக்கு சில குறைபாடுகள் இருக்கலாம் அதை வெளியில் சொல்வதை மறைத்துகூட சிலர் திருமணம் செய்திருக்கலாம். அவ்வாறு திருமணம் செய்தவர்கள் பெண்களிடம் உண்மைகளை மறைத்து வாழ்கின்றனர்.

எனவே ஒரு பெண் தாய்மை பாக்கியம் அடைந்து குழந்தையை பெற்றெடுக்க நிறைய கஷ்டங்களை அனுபவிப்பார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல வகையான பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இதற்கான தீர்வுகளை பார்ப்போம்..

பெண்கள் தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். மேலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமான உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. கலப்படம் கலந்த உணவுகளை சாப்பிடவே கூடாது.

பெண்கள் எப்போது அவர்களின் குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த காய்கறி, மற்றும் பழங்கள், தயிர் ஆகிய உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

நம் அன்றாட உணவில் அதிகமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் பெண்கள் பிரசவக் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

பெண்கள் கருத்தரிப்பதற்கு முன் மற்றும் குழந்தை பிறக்கும் வரை அதிக மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தினமும் காலை, மாலை தியானம், மற்றும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெண்கள் கருவுறுதலுக்கு முன்பு நல்ல அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம். கருவுறுதலுக்கு முன்பு யோகா பயிற்சிகளை செய்யலாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை நல்ல ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

பெண்கள் உடலுறவில், அவர்களின் மாதவிடாய் முடிந்த ஐந்தாவது நாளில் இருந்து பத்தாவது நாட்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் பெண்களின் இந்த நாட்களில் அவர்களில் கருவின் நலன் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அவர்கள் கருத்தரிப்பதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.