புதிரான உலகம்...Puthir.Com

உலகளாவிய தாக்கம் அதிகமாக இருக்கும்…? பெருங்கடல்கள் சூடாவதால்..!

0 28

பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு ஆராய்ச்சி நடத்தியது.இது குறித்து 12 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் தொகுத்துள்ள ஒரு அறிக்கை வெளியிடபட்டு உள்ளது.

அதில் பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகின்ற்ன. பருவநிலை மாற்றத்தால் மிதவைகள், ஜெல்லி மீன்கள், ஆமைகள் மற்றும் கடல் பறவைகள் ஆகியவை தங்களை காத்துக் கொள்ள கடல் நீரில் இறங்கி விடுகின்றன, முன்பு பெருங்கடல் நீர் அவற்றுக்கு மிகவும் குளிராக இருந்தது ஆனால் இப்போது அப்படி அல்ல.

மீன் இனங்கள் புதிய அட்சரேகைகளுக்கு இடம் பெயர்ந்து விட்டதால், உலகின் மீன்பிடித்துறை சீர்குலைந்து விடலாம். கடல் தொடர்பான வெப்ப மண்டல நோய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் பல புதிய பகுதிகளுக்கும் பரவக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.