புதிரான உலகம்...Puthir.Com

இரண்டு பெண்ணுறுப்பு கொண்ட பெண்..! இயற்கை நிகழ்த்திய அதிசயம்..! குழம்பி போன டாக்டர்கள்!

0 45

அமெரிக்காவை சேர்ந்தவர் கிறிஸ்டா. இவரது 12 ஆவது வயதில் மருத்துவப் பரிசோதனையின் போது இரண்டு பெண்ணுறுப்புகள் இருந்திருக்கிறது. அதில் ஒன்று மற்ற பெண்களைப் போன்று நார்மலாகவும், மற்றொன்று அதைவிட கொஞ்சம் சிறிய அளவிலும் இருந்திருக்கிறது.

மேலும் இவருக்கு கருப்பை, கருக்குழாய் ஆகியவையும் இரண்டு இருந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் இந்த பெண்ணால் குழந்தை பெற்று கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள்.

இரண்டு பெண்ணுறுப்பு கொண்ட பெண்
இரண்டு பெண்ணுறுப்பு கொண்ட பெண்

ஏனெனில், இவருடைய நார்மல் சைஸில் இருக்கும் பெண்ணுறுப்போடு இணைந்திருக்கும் கருக்குழாய் வழியாக விந்து செல்வதற்கான வழியே கிடையாது. அதனால் உறுதியாக இவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் அப்போது இரண்டு பெண்ணுறுப்பு இருப்பது கிறிஸ்டாவுக்கே தெரியாது. கிறிஸ்டா தன்னுடைய முப்பதாவது வயதில் தான் தனக்கு இரண்டு பெண்ணுறுப்பு இருப்பதை அடையாளம் கண்டதாக கூறுகிறார்.

20 வயதில் திருமணம் முடிந்த கிறிஸ்டா தன்னுடைய கணவரிடம் தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற விவரத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர்கள் உடலுறவின் போது, கருத்தடை சாதனங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.

இதனால் அவ்வப்போது கரு உண்டாகி, கலைந்து கொண்டே இருந்தது. இதுபோல் 100 முறைக்கு மேல் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. குழந்தை இல்லாத கவலையோடு இருவரும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்டாவுக்கு மாதவிலக்கு தள்ளிப்போனது. வழக்கம் போல கருச்சோதனை செய்திருக்கிறார். அப்போது பாசிட்டிவ் ரிசல்ட் காட்டியது இருவரையும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தங்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இருவரும் கட்டி தழுவி பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் மருத்துவர்களோ இது எப்படி சாத்தியம் என்று குழப்பமடைந்துள்ளனர். விந்து செல்வதற்கான வாய்ப்பே இல்லை என்று சொன்ன அந்த இடதுபக்க கருப்பையில் தான் குழந்தை வளர்கிறது. அந்த இடதுபுறம் உள்ள பெண்ணுறுப்பு தான் மிகச்சிறியதாக இருக்கிறது.

இப்போது கிறிஸ்டா வயிற்றில் வளரும் குழந்தைக்கு 5 மாதம் ஆகிறது. மருத்துவர்கள் பெருங்குழப்பத்தில் குழந்தையை எப்படி 10 மாதத்துக்குப் பிறகு வெளியே எடுப்பது என்ற விழி பிதுங்குகிறார்கள்.

சிசேரியன் தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூற, தான் ஆரோக்கியமாக குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்றும் அதுவும் தனக்கு சுகப்பிரவசம் ஆக வேண்டும். அதுவும் ஆண் குழந்தையாக இருக்க வேண்டும் ஆசை இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

கிறிஸ்டாவும் அவருடைய கணவரும் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் சூட்டி, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு இயற்கையின் படைப்பில்தான் எத்தனை விந்தைகள்..?