அப்பா நீயுமா ? அதிர்ந்த அழகு நடிகை மாடியில் இருந்து குதித்து..ஓ.. இறைவா!
வானத்தில் நீந்தும் ஒரு பெயரைக் கொண்டவர் அந்த நடிகை. பெயருக்கு பின்னால் மீசைக் கவிஞன் பெயர் இருக்கும். பதினைந்து வயதில் அழகு தேவதையாக அவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
கிறங்கிப் போனார்கள் பாலிவுட் ரசிகர்கள். காரணம் அது ஒரு நல்ல காதல் படம். பாடல்கள் உலகம் பூராவும் கொண்டாடப்பட்டது.
பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் அந்த தேவதைக்கு படிப்பில் தான் ஆசை. நடிப்பு சுத்தமாக பிடிக்கவில்லை.
காரணம் நடிப்பு வாய்ப்பு கேட்டுப் போகும் இடங்களில் அந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சின்னப் பொண்ணு என்று கூட பார்க்காமல் தொடுவதும் கட்டிப் பிடிப்பதுமாக இருந்தார்கள்.
சிலர் அந்தப் பெண்ணை கசக்கிவிடவும் வெறி கொண்டார்கள். பூ மாதிரி இருந்தார் அந்த தேவதை. படிக்க வேண்டும் என்று போராடிப் பார்த்தது, அந்த தேவதை.
ஆனால், குடும்ப வறுமை கட்டிப் போட்டுவிட்டது. நான்கு வருடங்களில் இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என படு பிசி ஆகி விட்டது அந்த தேவதை.
எங்கு போனாலும் அப்பா மட்டும் கூடச் செல்வார். பணம் கொட்டியது. வறுமை ஒழிந்து பெரும் வசதிகள் வந்து ஓட்டிக் கொண்டது.
ஆனாலும் அந்த தேவதைக்கு பாலியல் தொல்லைகள் வந்த படியே இருந்தது. சின்ன சின்ன செயல்களை அனுமதித்தாள், தேவதை. வேறு வழி இல்லை.
சில சமயங்களில் சின்ன தொடல்கள் தான் என்று அனுமதித்த போது, வரம்பு மீறி முற்றிலும் சீரழித்தார்கள் பாலிவுட் நடிகர்கள்.
தமிழ் படங்களில் மூணு படங்கள். மூன்றும் சூப்பர் ஹிட். தமிழ், தெலுங்கில் மரியாதையாகவே நடத்தப்பட்டார் தேவதை.
இந்தியில் அத்து மீறினார்கள். குடிக்க கற்றுக் கொடுத்தார்கள். ஏடாகூட விஷயங்கள் நடக்கும் அன்றெல்லாம் நிறைய குடித்து விட்டு போதை தலைக்கேற அழுது புலம்புவார்.
ஒருநாள் அந்தப் பெண் நல்ல போதையில் வீட்டில் படுத்திருக்க, அப்பா கதவைத் தட்டினார். கூடவே அந்த பிரமாண்டமான இந்தி வில்லன் நடிகர்பெரும் தொகையோடு வந்தார். ‘அந்த’ ஆசையோடு..!
அப்பா மகளுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினார். விஷயத்தைக் கூற நல்ல போதையிலும் திடுக்கிட்டு எழுத்தாள் தேவதை.
மகளிடம் விஷயத்தை கூறினார். அந்த வில்லனுக்கு நீ வேணும் என்றார். “அப்பா நீ கூடவா ஆள் பிடித்து வருகிறாய்” என்று கதறி அழுதது தேவதை. அப்பா மிரட்ட ஆரம்பித்தார்.
வில்லன் நிலைமை கண்டு வெளியேறி விட்டார். பக்கத்துக்கு பங்களாக்கள் விழித்துக் கொண்டன. பெரும் சண்டை அப்பாவும் நன்றாக குடித்திருந்தார்.
இரவு மூன்று மணி வரை கடும் போராட்டம். நடிகை தள்ளாடியபடி மொட்டை மாடிக்கு ஓடினார். அப்பா போதையில் பெட்டில் கவிழ்த்து விட்டார்.
மாடிக்கு ஓடிய நடிகை கொஞ்ச நேரம் அழுதார். பக்கத்துக்கு பிளாட் காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாடியில் இருந்து குதித்தார் நடிகை.
அதிர்ந்து போனார்கள் அக்கம் பக்கத்தினர். மண்டை உடைந்து மூளை சிதறி துடிதுடித்து இறந்து போனார் அந்த அழகு தேவதை.
போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார், அந்த அரக்க அப்பா. ஜெயிலுக்குப் போனார்.
ஆனால் மிகப் பெரிய நடிகையாக வந்திருக்க வேண்டிய அந்த தேவதை அல்ப ஆயுசில் இறந்து போனது தான் கொடுமை.