புதிரான உலகம்...Puthir.Com

தூங்கும் போது தயார்நிலையிலே உள்ள மூளை.. ஆய்வில் தகவல்

0 17

உறங்கும்போதும், ஏதேனும் நிகழ்ந்தால் அதனை உடனே எதிர்கொள்ளும் வகையில், நமது மூளை தயார்நிலையில் காத்திருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறக்கநிலையில் நம் உடல் இயக்கம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு விரிவான ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், உறங்கும்போது, நம் உடல் உறுப்புகள் செயல்படும் விதம் பற்றி நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, விதவிதமான கோணங்களில் பிரத்யேக வீடியோ காட்சிகளை எடுத்து, அவற்றை ஆராய்ந்தனர்.

இதன்படி, உறங்கும்போதும் இதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தொடர்ந்து இயங்குவதாக, தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, நமது மூளை, உறங்கும் முன்பாக, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை படம்பிடித்து ஒரு காட்சித் தொகுப்பாக, நினைவு வைத்துக் கொள்வதாகவும், அதன் அடிப்படையில் இரவு முழுவதும் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் மூளை செயல்படுவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலர் திடீரென உறக்கத்தின் இடையே எழுந்து, சிறுநீர் கழிக்கச் செல்வது, எறும்பு கடித்தால் அதனை நசுக்குவது, குடிநீர் பருகுவது உள்ளிட்ட செயல்களை செய்ய, மூளையின் தயார்நிலையே முக்கிய காரணம் என்றும் அந்த பேராசிரியர்கள் குழு குறிப்பிடுகின்றனர்.

மூளை எந்நேரமும் எதேனும் ஒரு ஆபத்தையோ அல்லது அடுத்தக்கட்ட நகர்வையோ எதிர்பார்த்தே காத்திருக்கிறது என்பதால், அதன் அடிப்படையில் நாமும் ஒத்திசைவு வழங்கவேண்டும் என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.