புதிரான உலகம்...Puthir.Com

மார்பக கட்டியை கரைப்பதற்கான ஒரு இயற்கை வைத்தியம்

0 17

நமது உடலில் ஏற்படும் ஒருசில உடல்நலக் குறைபாடு தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு ஆங்கில மருத்துவத்தை, இயற்கை மருத்துவத்தில் நிறைய பயனுள்ள மருந்துகள் இருக்கின்றன.

அந்த வகையில் நமது வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு சில இயற்கையான பொருட்களை வைத்தே, மார்பக கட்டியை கரைத்து விடலாம்.

மார்பக கட்டியை கரைக்கும் இயற்கை மருத்துவம்
  • தொட்டா சிணுங்கி செடியின் ஏதேனும் ஒரு பாகத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதை ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
  • கழற்சிக் காயில் உள்ள ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்து, அதில் ஒரு பங்கு எடுத்து மிளகு பொடியுடன் சேர்த்து கலந்து அதை தினமும் இரு வேளைகள் உணவுக்கு முன் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டி போட்டு, அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் இருவேளைகள் குடித்து வந்தால் மார்பக கட்டிகள் கரைந்து, அதன் வலி மற்றும் வீக்கமும் குறையும்.