புதிரான உலகம்...Puthir.Com

ஆண்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்சனைகளில் சில? ஹெல்த் டிப்ஸ்

0 24

ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கும் உடல்ரீதியான பிரச்சனைகளில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பெண்களுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப சில உடல் உபாதைகள் வரும்.

ஆண்கள் வயதான காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். ஆண்களிடம் இருக்கும் ஆண் தன்மை குறித்த செயல்பாடுகளை அவர்களின் ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன்கள் தீர்மானிக்கிறது.

ஆண்களின் இந்த ஹார்மோன், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தூண்டுதல் மூலம் விதைப்பையில் சுரக்கிறது. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் பாலியல் மற்றும் மனம் ரீதியாக ஆண்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. ஆண்கள் இந்த ஹார்மோன் குறித்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

ஆண்கள் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கங்கள் மூலம் விந்தணு கோளாறுகள் தொடர்பான பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் நீரிழுவு நோய் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள்.