புதிரான உலகம்...Puthir.Com

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? தவிர்க்கக்கூடாத இரண்டு விஷயங்கள்

0 17

உடல் உறுப்புக்களில் முக்கியமான ஒன்று தான் இதயம். இதயத்தின் செயல்பாடுகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே மற்ற உறுப்புக்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, நாம் தற்பொழுது ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அதாவது, அமெரிக்காவின் ஆய்வு ஒன்று கூறுகையில், காலை மற்றும் இரவு உணவை கைவிடும் பொழுது, இதயத்தின் பலம் குறைந்துவிடுவதாக கூறுகின்றது.

கடந்த 40 வருடங்களில் மக்களிடம் உள்ள உணவுப்பழக்க வழக்கங்களில் காலை மற்றும் இரவு உணவை தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாக தெரிய வருகின்றது. இந்த இரு நேர உணவுகளுமே நம்முடைய உடலில் நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உடல் பருமன் வருவதில் இருந்து தடுப்பதாக கூறப்படுகின்றது.

இந்த தகவலை அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் இந்த வாரம் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.

நம்முடைய மூன்று நேர உணவு பழக்கத்தில், இந்த இரண்டு நேர உணவுகளுமே மிகவும் முக்கியமானதாம். அதிலும், நீங்கள் காலை உணவாக, சோறு சாப்பிடுவதால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், இந்த தகவல் நமக்கு புதிதாக தோன்றினாலும், நம்முடைய முன்னோர்களுக்கு ரொம்ப பழைய விஷயம் தான். ஏனென்றால், ஒரு காலத்தில் தோட்ட வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் எல்லோருமே, பழைய சாதத்தையே சாப்பிடுவார்கள்.

அவர்கள் சாப்பிடக்கூடிய அந்த சாப்பாடு, அவர்களை இரவு வீடு திரும்பும் வரை தாக்குப்பிடித்திருக்கும். அதுதான், அந்த உணவின் மகிமை. அமெரிக்காவின் ஆய்வுகள் இப்பொழுது, இதை சொன்னாலும், நம்முடைய முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தி காட்டி விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை.