புதிரான உலகம்...Puthir.Com

அவுஸ்திரேலியாவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தை : அருகில் வந்த பேய்..!

0 16

அவுஸ்திரேலியாவில் குழந்தை ஒன்று படுத்திருந்த கட்டில் மேலே பேய் உலாவிய காட்சியை பார்த்து தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

குழந்தைகள் படுக்கும் அறையில் கமெராவினை பொருத்தி வைப்பதன் மூலம் அக்குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை அறிந்துகொள்வதை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெற்றோர்கள் பின்பற்றுவது வழக்கம்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் Victoria மாநிலத்தை சேர்ந்த ஜடே யேட் என்ற பெண்மணி தனது பெண் குழந்தை ரூபியை கட்டிலில் படுக்க வைத்துள்ளார்.

அப்போது, குழந்தை படுத்திருந்த கட்டிலின் மேலே இரண்டு பேய்களின் உருவம் தெரிந்துள்ளது, தலை மற்றும் உடலுடன் தோன்றிய அந்த உருவம் மெதுமெதுவாக வலது புறம் நோக்கி நடப்பதும், இடது புறம் நோக்கி நடப்பதுமாக இருக்கின்றன.

அதன்பிறகு, அது, தனது உருவத்தை சுருக்கிகொள்கின்றது. இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ள யேட், எனது குழந்தை தூங்கிகொண்டிருக்கும்போது, பேய்கள் அவளுடன் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது என்று எழுதியுள்ளார்.

இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர், சிலர், அதில் இரண்டு முகங்கள் தெரிகின்றன, ஒன்று இளம்வயது பெண்ணின் முகம் மற்றொன்று வயதான பெண்ணின் முகம் என்று கூறியுள்ளனர்.

சிலர், இந்த காட்சி பயமுறுத்தும் விதமாக உள்ளது என்றும் இன்னும் சிலர், ஆவிகள் நட்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து யேட் மேலும் கூறியதாவது :-

திரையில்(Monitor) இந்த காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சிடையந்தேன், பின்னர் எனது மகளை சென்று பார்க்கையில் அவளது ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் என்று கூறியுள்ளார்.