புதிரான உலகம்...Puthir.Com

ராட்சச நண்டை வெறும் கைகளால் பிடிக்கும் நபர்: அது கடித்தால் தேங்காய்யை கூட உடைக்கும் !

0 16

ஒரே கடியில் தேய்காயை இரண்டாகப் பிளக்கும் , சக்திகொண்ட ராட்சச நண்டுகள் இன்னும் உலகில் உயிர்வாழ்கிறது. அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள ஒரு சிறிய தீவு தான் கிருஸ்மஸ் தீவு. இங்கே நீங்கள் உலகில் பார்க முடியாத பல அபூர்வமான ஜந்துக்களை காணமுடியும். குறிப்பாக இந்த தீவுக்கு நீங்கள் சென்றால், வேறு ஒரு உலகத்திற்கு சென்றுவிட்டோமோ என நினைப்பீர்கள். ஏன் என்றால் அங்கே உள்ள மரம் , செடி கொடிகள் , பூக்கள் அனைத்துமே நீங்கள் இதுவரை காணாத வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால் ஆபத்தும் நிறைந்த தீவு தான். பொதுவாக இத்தீவுக்கு செல்பவர்கள் ஆராட்சியாளர்கள். அல்லது உயிரியலில் விருப்பமுடையவர்களாகவே இருப்பார்கள்.

இத்தீவுக்கு சுற்றுலா சென்ற நபர் ஒருவர் அங்கே வசிக்கும் ராட்சச நண்டு ஒன்றை அலேக்காக தூக்கி வைத்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். சற்று தவறினால் கூட அது கடித்துவிடும். அதன் கை அலகுகள் மிகவும் பலமானவை. அவை கடித்தல் தேங்காய் கூட உடனே உடைந்துவிடும்.