புதிரான உலகம்...Puthir.Com

சிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை : இதய துடிப்பை கேட்டு கதறிய தாய்

0 24

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு லூகாஸ் கிளார்க் என்ற 7 மாத குழந்தை , மூளைச்சாவு அடைந்தான். லூகாசின் தாய், அவனது இதயத்தை தானமாக அளிக்க முன்வந்தார்.

இதயநோயால் அவதிப்பட்டு வந்த, 4 வயது நிரம்பிய ஜோர்டான் ட்ரேக் என்ற சிறுமிக்கு லூகாசின் இதயம் பொருத்தப்பட்டது. சிறுமி ஜோர்டன் லூகாஸ் மூலம் உயிர் பெற்றார்.

சமீபத்தில் அந்த சிறுமியை லூகாசின் தாயார் சந்தித்தார். அப்போது மருத்துவர்கள், சிறுமிக்குள் துடித்துக் கொண்டிருக்கும் லூகாசின் இதயதுடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் அவரது தாயை கேட்க வைத்தனர். மகனின் இதயதுடிப்பை கேட்டு தாய் கதறி அழும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.