புதிரான உலகம்...Puthir.Com

இந்த பெண்ணின் வேலையை பார்த்தால் மயங்கமே வந்துவிடும்

0 11

மாஸ்கோவில் வசிக்கும் மைக்கேல் ஸஜ்கோவ் நிஜ மனிதர்களைப் போல பொம்மைகளைச் செய்வதில் சிறந்த கலைஞர். பாலிமர் களிமண்ணைக் கொண்டு பொம்மைகளின் உடலை உருவாக்குகிறார். கண்களுக்கு ஜெர்மன் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார். தலை முடியை பிரான்சிஸ் இருந்து வாங்குகிறார். இப்படி எல்லாம் சேரும்போது நிஜ மனிதர்களைப் போலவே பொம்மைகள் தோற்றம் அளிக்கின்றன. பொம்மலாட்டக் கலைஞராக இருந்த மைக்கேல், 2010-ம் ஆண்டுதான் முதல் பொம்மையை உருவாக்கினார்.

உலகம் முழுவதும் இவருடைய பொம்மைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் எப்படி பொம்மையை உருவாக்குகிறார் என்பதையும் வீடியோவாக வெளியிட்டு வருகிறார் மைக்கேல். ’’இத்தாலியைச் சேர்ந்த லாரா ஸ்காடோலினி, பிரான்ஸைச் சேர்ந்த ஆன் மிட்ரானி ஆகியோரைப் பார்த்துதான் பொம்மைகள் உருவாக்கும் எண்ணம் வந்தது. என்னுடைய பொம்மைகள் பழமையை எடுத்துச் சொல்லக்கூடியவை. ஒவ்வொரு பொம்மையும் ஏதோ ஒரு சோகத்தை வெளிப்படுத்துவதாகவே உருவாக்குகிறேன். மற்ற பொம்மைகளைப் போல எல்லோருக்கும் என் பொம்மைகள் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பொம்மை என்றாலே மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமாக இருக்கும். பொம்மைகளைச் சேகரிப்பவர்களும் என் திறமை மீது ஆர்வம் உள்ளவர்களும்தான் என் வாடிக்கையாளர்கள்’’ என்கிறார் மைக்கேல்.