புதிரான உலகம்...Puthir.Com

ஜஸ்டின் பைபர் “O MY GOD” சொன்ன பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா – உண்மை தான் !

0 14

பாப் இசை உலகையே ஒரு கலக்கு கலக்கி வருபவர் ஜஸ்டின் பைபர். அவர் தற்செயலாக தன்னுடைய இன்ஸ்டோ கிராம் வலையத்தளத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து. ஓ மை காட் , யார் இந்த அழகி என்று கேட்டிருந்தார். உடனே மில்லியன் கணக்கான அவரது ரசிகர்கள் அப்பெண் யார் என்பதனைக் கண்டறிந்து சொல்லிவிட்டார்கள். அவர் வலையத் தளத்தில் மிகவும் பிரபல்யமாகி. அவருக்கு 1 மில்லியன் நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். அவர் ஸ்பெயின் நாட்டில் , குழந்தைகளை பராமரிப்பவராக பணி புரிந்து வருகிறார். மணித்தியாலத்திற்கு வெறும் 3 பவுன்களை உழைக்கும் ஒரு மிகவும் சாதாரண தொழிலாளி. ஆனால் இன்று அவரது நிலை முற்றாக மாறிவிட்டது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள பல கம்பெனிகள் அவரை அணுகி மாடலிங் செய்யுங்கள் என்று கெஞ்சியுள்ளார்கள். இதனால் அவர் தற்போது மாடலிங்கில் இறங்கியுள்ளார். 17 வயதாகும் இப்பெணின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஜஸ்டின் பைபர் சொன்ன ஒரு வார்த்தையால் , இன்று பல லட்சம் பணம் இவர் கைகளில் புரண்டு ஓடுகிறது என்கிறார்கள் என்றால் பாருங்களேன்.