புதிரான உலகம்...Puthir.Com

வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழர்

0 12

உசிலம்பட்டி அருகே உள்ள கட்டதேவன்பட்டியைச்சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் தினகரன் (வயது 30). அமெரிக்காவில் உள்ள அல்பர்டா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புஸ்காஸ் அன்னா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்களது திருமணத்துக்கு சம்மதம் வாங்கினர்.

இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் மதுரை பரவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி நடைபெற்றது. தினகரன், புஸ்காஸ் அன்னாவின் கழுத்தில் தாலி கட்டினார். அதை தொடர்ந்து ஹங்கேரி பெண் தமிழ்நாட்டு மருமகளாகினார்.

இந்த திருமண விழாவில் ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.