புதிரான உலகம்...Puthir.Com

ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது? விஜய் வரலாமா.. சீமானின் அதிரடி பதில்?

0 31

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் நக்கீரன் நிருபர் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது சரி. ஆனால் விஜய் வரலாமா என கேட்டார்.

அதற்கு சீமான் பதில் கூறும்போது, விஜய் வரட்டும். அவர் அரசியலுக்கு வரட்டும். 5 ஆண்டு 10 ஆண்டு சேவை செய்யட்டும். விஜய் மண்ணின் மைந்தன். அவருக்கு வாழுகிற, ஆளுகிற உரிமை உண்டு.

ஆனால் ரஜினி வந்தால் முதல்வராக மட்டுமே வருவேன் என கூறுவது சரியல்ல. ரஜினிக்கு வாழுகிற உரிமை மட்டுமே உண்டு. ஆனால் தமிழர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டை ஆள்கிற, வாழ்கிற உரிமை உண்டு என்றார்.